சுவிற்சர்லாந்தில் துப்பாக்கிச் சூடு நடத்தி கைது செய்யப்பட்ட ஜோடி
அதிவேகமாக வாகனம் ஓட்டிய இரண்டு பேரை சூரிச் கன்டோனல் பொலிசார் விரட்டிச் சென்று துப்பாக்கிச் சூடு நடத்தி கைது செய்துள்ளனர்.
17 வயது ஓட்டுநர் மற்றும் அவரது 22 வயது பெண் பயணி ஆகியோர் வின்டர்தர் நகர பொலிசார் மறித்த போது, நிறுத்தாமல் தப்பிச் சென்றனர்.
அவர்கள் சூரிச்/பெர்னை நோக்கி அதிவேகமாக தப்பிச் சென்ற போது, குப்ரிஸ்ட் சுரங்கப்பாதையில், போக்குவரத்து நெரிசலில் வாகனம் நின்று கொண்டிருந்த கார்களுக்கு இடையில் சிக்கி, ஒரு ரோந்து காரில் மோதியது. இதன் பின்னர் பொலிசார் வாகனத்தின் மீது பல முறை துப்பாக்கிச் சூடு நடத்தினர்,இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
இருப்பினும், ஓட்டுநர் சுரங்கப்பாதை வழியாக தப்பிச் சென்றார். வெளியேறிய சிறிது நேரத்திலேயே, அடுத்த போக்குவரத்து நெரிசலில், அந்த இளம் ஜெர்மன் நபரையும் அவரது இத்தாலிய பெண் பயணியையும் பொலிசார் கைது செய்தனர்.
(வீடியோ இங்கே )