அமெரிக்காவில் கொட்டி தீர்க்கும் பனி : 200 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பாதிப்பு!
#SriLanka
#America
#Strom
Thamilini
4 hours ago
அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள பனிப்புயல் காரணமாக 200 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்படுவார்கள் என எதிர்வுக்கூறப்பட்டுள்ளது.
அதேநேரம் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதுடன், பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் ஆயிரக்கணக்கான மக்கள் மின்சாரம் இன்றி தவிப்பதாகவும் கூறப்படுகிறது.
தற்போதைய சூழ்நிலை காரணமாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நாட்டின் 21 மாநிலங்களுக்கு அவசரகால நிலையை அறிவிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.