உடல்நிலை சரியில்லாத நிலையில் சிறையில் வாடும் மீனவர்கள் - போராட்டத்தில் இறங்கிய உறவினர்கள்!

#India #SriLanka #Fisherman #ADDA #ADDAADS #ADDAFLY
Thamilini
3 hours ago
உடல்நிலை சரியில்லாத நிலையில் சிறையில் வாடும் மீனவர்கள் - போராட்டத்தில் இறங்கிய உறவினர்கள்!

எல்லை தாண்டி மீன்பிடித்த வழக்கில் கைது செய்யப்பட்டு 18 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டு இலங்கை சிறையில் உள்ள பாம்பன் மீனவர்கள் 10 பேரை விடுதலை செய்யக்கோரி மீனவர்களின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

பாம்பன் பேருந்து நிலையம் முன்பு இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டதால் அரை  மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கடந்த ஆகஸ்ட் மாதம் 5ந் திகதி எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் இந்தியாவைச் சேர்ந்த 10 மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். 

அவர்களுக்கு  இந்திய தொகையில் ஒரு கோடியே 40 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதனை செலுத்த தவறும் பட்சத்தில் 18 மாத சிறை தண்டனை விதித்து இலங்கை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 

இந்நிலையில் குறித்த 10 மீனவர்களும்  இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கடந்த நான்கு மாதங்களை கடந்து சிறையில் இருப்பதால் மீனவர்களுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. 

அவர்களை உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தி மீனவர்களின் குடும்பத்தினர் பாம்பன் பேருந்து நிலையம் முன்பு மதுரை தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!