சுவிஸ் தூதுவராலயத்தில் நெருக்கடிகளுக்கு முகம்கொடுக்கும் தமிழ் மக்கள்…..

#SriLanka #people #Embassy #Swiss #ADDA #Harini Amarasooriya #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
3 hours ago
சுவிஸ் தூதுவராலயத்தில் நெருக்கடிகளுக்கு முகம்கொடுக்கும்  தமிழ் மக்கள்…..

சுவிஸ் நாட்டில் இருந்து இயங்கும் இலங்கை தூதுவராலயத்தில் தமிழர்களின் பிறப்பு அத்தாட்சிப்பத்திரம், கடவுச்சீட்டு புதுப்பித்தல் போன்ற சேவைகள் மிக மிக தாமதமாக நடைபெறுவதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றார்கள்

அலுவலகத்தில் இது பற்றி வினாவினால், இலங்கையில் இருந்து வர தாமதம் எனவும் ஒரு இலக்கத்தை கொடுத்து அங்கே கேளுங்கள் எனவும் கூறப்படுகிறது. 

இலங்கைக்கு அழைப்பு செய்து கேட்டால் எங்கே விண்ணப்பித்தீர்களோ அங்கேதான் கேட்க வேண்டும் என கூறுகிறார்கள். முன்னைய அரசில் லஞ்சம் கொடுத்து பல வேலைகளை இலங்கையில் செய்த மக்கள். இப்பொழுது அலுவலகங்களில் லஞ்ச ஊழல் இல்லாததால் அலுவலக ஊழியர்களும் அக்கறை காட்டவில்லை என சுவிஸ் வாழ் மக்கள் கூறுகின்றனர்.

இவ்விடயம் தொடர்பாகவும் கௌரவ பிரதமர் ஹரிணி அமரசூரியவை சுவிஸ் நாட்டில் சந்தித்த தமிழ் மக்கள் எடுத்து கூறியதாகவும் அதற்கான நடவடிக்கையை அவர் விரைவாக எடுப்பதாகவும் கூறினார் எனவும் அறியமுடிகிறது.

நாமும் இவ் விடயத்துக்கு ஒரு நல்ல தீர்வு கிடைக்கும் என நம்புவோம்.

இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும்  lanka4.com  ஊடகத்துடன் இணைந்திருங்கள்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!