ஆஸ்திரேலியாவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் மூன்று பேர் மரணம்
#Death
#Australia
#Murder
#GunShoot
Prasu
1 hour ago
ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் லேக் கார்கெல்லிகோ என்ற நகரில் மர்ம நபர் ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்தி உள்ளார்.
இதில் 2 பெண்கள் மற்றும் 1 ஆண் என 3 பேர் கொல்லப்பட்டனர். மேலும் ஒருவர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
துப்பாக்கிச்சூடு நடத்தியவர் உயிரிழந்த 2 பெண்களில் ஒருவரின் முன்னாள் காதலன் என்றும் இது தனிப்பட்ட பகையால் நடந்தது என்று கூறப்படுகிறது.
துப்பாக்கிச்சூடு நடத்திய நபரை போலீசார் தேடி வருகின்றனர். இதுகுறித்த மேலதிக தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
(வீடியோ இங்கே )