புலம்பெயர்ந்த தமிழர்கள் பொங்கல் எப்பொழுது கொண்டாட வேண்டும்! சோதிடர் சுதாகர்
தை மாதம் முதலாம் திகதி தான் தைப்பொங்கல். கொண்டாடுவார்கள் வெளிநாடுகளில் புல(ன்)ம்பெயர்ந்த தமிழர்கள் முதல் நாளே சூரியன் மகர ராசிக்கு சென்று விட்டதாக சொல்லிக்கொண்டு கொண்டாடுகிறார்கள். இது பொங்கலை இழிவுபடுத்தும் செயலாகும்.
அதிகாலையில் சூரிய உதயத்தோடு சேர்ந்தே எமது திகதி அதாவது நாள் உருவாகிறது அப்படி இருக்கும் பொழுது முதல் நாள் எப்படி பொங்கலைக் கொண்டாட முடியும் எமது நாள் உதயமாகும் பொழுது சூரியன் மகர ராசியில் இருந்தால் அன்றே உண்மையான பொங்கல் அப்படி இல்லை முதல் நாள் தான் பொங்கல் என்றால் வெளிநாடுகளில் உள்ள நாள்காட்டிகளில் ஒரு நாளை குறைத்து முதல் நாளே தை முதலாம் திகதி என்று குறிப்பிட்டிருக்க வேண்டும்.
இந்தச் சிறிய சிந்தனை கூட இல்லாத புத்திசாலிகளை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. காலப்போக்கில் இது என்றோ ஒருநாள் பொங்கினால் சரி என்கின்ற அளவுக்கு மாறினாலும் மாறலாம் அதைவிட இன்னும் சிறப்பு சில ஆலயங்களில் மாலையே பொங்கல் விழாக்களை நடத்துகிறார்கள் ஒருவேளை இது சந்திரப் பொங்கலோ தெரியவில்லை.
50 ஆண்டின் பின் நமது எதிர்காலத்தின் நிலமை எப்படி ஆகுமோ கோயிலை நடத்துபவர்களுக்கும் பூசாரிகளுக்குமே வெளிச்சம்
- சோதிடர் சுதாகர்-
சித்தர் சோதிட நிலையம் சூறிச் www.cittarastro.ch
இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் LANKA4 ஊடகத்துடன் இணைந்திருங்கள்