ஈரானில் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டத்தில் 51 பேர் மரணம்
#Death
#Protest
#government
#Iran
Prasu
22 hours ago
ஈரானில் கடும் பொருளாதார நெருக்கடி, விலைவாசி உயர்வு உள்பட பல்வேறு காரணங்களால் அந்நாட்டு உச்ச தலைவர் அயத்துல்லா அலி கமேனிக்கு எதிராக போராட்டம் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், ஈரானில் நடைபெற்றுவரும் போராட்டத்தில் இதுவரை 51 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில், பாதுகாப்புப்படையினர் 21 பேர், 9 குழந்தைகளும் என தகவல் வெளியாகியுள்ளது.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பாதுகாப்புப்படையினர் நடத்திய தாக்குதலில் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர்.
மேலும், போராட்டத்தில் ஈடுபட்டதாக இதுவரை 2 ஆயிரத்து 300 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
(வீடியோ இங்கே )