இலங்கைக்கு அமெரிக்காவால் ஆபத்தா? முழுமையாக பாருங்கள் (வீடியோ இணைப்பு)
அண்மைக்காலமாக இலங்கைக்கு அமெரிக்காவினால் ஆபத்து இருப்பதாக சில ஊடகங்களில் தகவல் வெளியாகி இருந்தது.
வெனிசுலா அதிபரை திடீரென கைது செய்தது போல ஒரு சில அனர்த்தங்கள் சில வழிகளில் இலங்கையில் நடைபெறலாம் என்ற அபாயமணியை ஒரு சில ஊடகங்கள் அடித்திருந்ததை பார்க்கக் கூடியதாக இருந்தது. உண்மையிலேயே அது ஒரு யதார்த்தம் இல்லாத செய்தியாக நாங்கள் கருதுகின்றோம்.
இந்த கருத்து மற்றவர்களுக்கு திணிப்பு அல்ல எங்களுடைய பார்வையிலே நாங்கள் இப்படித்தான் பார்க்கின்றோம். இலங்கையை பொறுத்தவரையில் இலங்கை இருக்கின்ற அந்த கேத்திர நிலையத்தை நாங்கள் பார்க்கின்ற பொழுது எங்கே இருக்கிறது எதைச் சூழ்ந்திருக்கிறது இலங்கையை சுற்றி என்னென்ன நாடுகள் இருக்கின்றன அவர்களுடைய தகவல் என்ன அவருடைய பாதுகாப்பு, பலம் என்ன அவர்களுக்கும் அமெரிக்காவுக்கு எவ்வளவு தூரம் ஒற்றுமை இருக்கிறது வேற்றுமை இருக்கிறது எதிர்ப்பு இருக்கிறது ஆதரவு இருக்கிறது என்பதை நாங்கள் முதலிலே பார்க்க வேண்டும்.
இந்தியா இலங்கைக்கு மிகவும் முக்கியமான அயல் நாடு. ஏதாவது ஒரு பிரச்சனை என்றால் முதலில் கை கொடுக்க வேண்டும் அனர்த்தமாக இருந்தாலும் சரி ஒரு நாட்டை ஆதரிப்பதாக இருந்தாலும் சரி அது இந்தியா தான் அதைச் செய்யும் என்பதில் அச்சமே இல்லை எந்தவித ஐயப்பாடு இல்லை காரணம் அருகில் இருக்கின்ற நாடு வல்லரசு நாடு ஒரு நொடியிலே இலங்கை பிடித்துவிட முடியும்.
அத்தோடு அடுத்ததாக பார்க்கின்ற பொழுது சீனா . இலங்கைக்கு அமெரிக்காவிடமிருந்து மிகவும் வன்மையாக இருக்கிறது அதைவிட நெருக்கமான உறவோடும் எல்லா அரசுகளோடும் ஆளுகின்ற அனைத்து அரசுகளோடு ஒத்து தங்களுடைய வியாபாரத்தை அவர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள் அதைவிட போட் சிட்டி எனப்படுகின்ற கொழும்புத்துறைமுக இடத்தையும் அவர்கள் வாங்கி அது குத்தகைக்காக இருக்கலாம் வாங்கி அங்கே அமர்ந்திருப்பதும் தங்களுடைய வியாபாரத்தை மேலும் அதிகரிப்பதற்கும் ஒரு தளத்தை உருவாக்குவதற்கும் தங்களுடைய உளவு பணிகளை பார்ப்பதற்கும் அதாவது இலங்கையிலே ஏன் உளவு பார்க்க வேண்டும்.
இலங்கை என்று பார்த்தால் இலங்கையை உளவு பார்ப்பதற்கில்லை இந்தியாவை உலக பார்ப்பதற்கும் வேறு நாடுகளிலே இருக்கின்ற அந்த உழவுப் படைகள் இலங்கைக்கு வந்து செல்வதால் அவர்களை உளவு பார்ப்பதற்கும் நிச்சயமாக கட்டாயம் தேவையான ஓர் இடமாக அது இருக்கிறது.
அமெரிக்காவைப் பொறுத்த வரையிலே அமெரிக்காவிற்கு இலங்கையோடு அவ்வாறு கருத்து வேறுபாடுகள் எதுவும் இல்லை. உதாரணத்திற்கு அனுராவை பொருறுத்தவரையிலும் வெனிசுலா அதிபரை கைது செய்ததற்கு ஏஜேவிபி கண்டனம் தெரிவித்திருக்கிறதே தவிர என்பிபி அரசு இதுவரை உத்தியோகபூர்வமாக எந்தவித கண்டனம் தெரிவிக்கவில்லை அதை வைத்து நாங்கள் பார்க்கின்ற பொழுது அவர்கள் அமெரிக்காவோடு மோதிக் கொள்ள அவர்கள் விரும்பவில்லை பொருளாதார ரீதியாக இருக்கட்டும் இராணுவ ரீதியாக இருக்கட்டும் அது அமெரிக்கா இலங்கைக்கு ஒரு வேண்டிய நாடாக இருந்து கொண்டிருக்கிறது மத்திய நாடுகளைப் போன்று.
இது தொடர்பான மேலதிக தகவல்களை அறிய வீடியோவை கிளிக் செய்யவும்
இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் LANKA4 ஊடகத்துடன் இணைந்திருங்கள்