யாழ்ப்பாணத்தை அண்மிக்கும் காற்றழுத்தம் அடுத்த 72 மணித்தியாலங்கள் குறித்து எச்சரிக்கை

#SriLanka #Jaffna #Rain #ADDA #shelvazug #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
15 hours ago
யாழ்ப்பாணத்தை அண்மிக்கும் காற்றழுத்தம்  அடுத்த 72 மணித்தியாலங்கள் குறித்து எச்சரிக்கை

வங்காள விரிகுடாவில் மட்டக்களப்புக்கு கிழக்காக காணப்படும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கிழக்கு மாகாணக் கரையோரமாக வடக்கு, வட மேற்கு திசையில் நகர்ந்து யாழ்ப்பாணத்திற்கு அண்மிக்கும் வாய்ப்புள்ளது 

என யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புவியியற்றுறை தலைவர், பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா குறிப்பிட்டுள்ளார்.அவர் இன்று வெளியிட்டுள்ள பதிவில் மேலும் குறிப்பிடுகையில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், யாழ்ப்பாணத்தினை அண்மிக்கும் போது வலுக்குறைந்து தாழ்வு நிலையாகவே கரையைக் கடக்கும் வாய்ப்புள்ளது. 

ஆகவே மலையக மக்கள் அச்சப்பட தேவையில்லை. ஆனால் மத்திய, ஊவா மாகாணங்களில் சில இடங்களில் எதிர்வரும் 11.01.2026 வரை கன மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது. 

ஆகவே, அடுத்த வரும் 48 மணித்தியாலங்கள் கிழக்கு மாகாணத்திற்கும், 72 மணித்தியாலங்கள் வடக்கு மாகாணத்திற்கும் முக்கியமானவை. எனவே கனமழை, வேகமான காற்று வீசுகை தொடர்பில் தயவு செய்து மக்கள் மிக அவதானமாக இருப்பது அவசியம் என குறிப்பிட்டுள்ளார்

                 இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் LANKA4 ஊடகத்துடன் இணைந்திருங்கள்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!