பாடசாலை வீதியை புனரமைத்து தாருங்கள்; மூதூர் - பாரதிபுரம் மக்கள் கோரிக்கை!

#SriLanka #School #Road #ADDA #shelvazug #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
15 hours ago
பாடசாலை வீதியை புனரமைத்து தாருங்கள்; மூதூர் - பாரதிபுரம் மக்கள் கோரிக்கை!

மூதூர் பிரதேச செயலாளர் பிரிவின் பாரதிபுரம் கிராமத்திலுள்ள பாடசாலை வீதியை புனரமைத்துத்தருமாறு வலியுறுத்தி இன்று வெள்ளிக்கிழமை (09) காலை கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

குறித்த போராட்டத்தை பிரதேச மக்கள் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்திருந்தனர்.சுமார் 600 மீற்றர் தூரம் கொண்ட பாரதிபுரம் பாடசாலை வீதியானது பிரயாணம் மேற்கொள்ள முடியாமல் பள்ளமும்,குழியுமாக காணப்படுகிறது. 

இதன் காரணமாக இவ்வீதியை பயன்படுத்தி பிரயாணம் மேற்கொள்ளும் பாடசாலை மாணவர்களும் பொதுமக்களும் அசௌகரியங்களை எதிர்நோக்குவதாக தெரிவிக்கின்றனர்.முன்னைய அரசாங்கம் எமது கோரிக்கைகளை நிராகரித்துள்ளது. 

தற்போது நல்ல அரசாங்கம் ஒன்று அமைந்துள்ளமையினால் அரசியல்வாதிகள் நடவடிக்கை மேற்கொண்டு பாடசாலை வீதியை புனரமைத்து தருமாறு குறித்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

                                           இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் LANKA4 ஊடகத்துடன் இணைந்திருங்கள்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!