தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு எச்சரிக்கை விடுத்த பிரித்தானியா
#Sexual Abuse
#Tech
#Warning
#company
#England
Prasu
21 hours ago
சமூக ஊடகங்கள் மற்றும் டேட்டிங் தளங்கள் ஊடாக பரப்பப்படும் நிர்வாண புகைப்படங்களை முன்கூட்டியே அறிந்து அவற்றை தடுக்கும் வகையில் புதிய சட்டம் ஒன்று பிரித்தானியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
ஆன்லைன் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் சைபர்ஃப்ளாஷிங் குற்றங்களுக்கு தற்போது முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
புதிய சட்டமானது இவ்வாறான குற்றங்களை தடுக்கும் அதிக பொறுப்பை தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு வழங்குகிறது.
புதிய சட்டத்திற்கு இணங்கத் தவறும் தளங்கள் கணிசமான அபராதங்களை எதிர்கொள்ள நேரிடும்.
குறித்த நிறுவனங்களின் உலகளாவிய வருவாயில் சுமார் 10 சதவீதம் அபராதமாக விதிக்கப்படலாம் அல்லது பிரித்தானியா முழுவதும் அவர்களது சேவை தடைப்படலாம்.
(வீடியோ இங்கே )