ஜனாதிபதியை கைது செய்ததில் உள்ள மர்மம்? வரலாற்றுப் படிப்பினையை மறந்த மதுரோ.

#SriLanka
Mayoorikka
1 day ago
ஜனாதிபதியை கைது செய்ததில் உள்ள மர்மம்? வரலாற்றுப் படிப்பினையை மறந்த மதுரோ.

வெனிசுவேலா ஜனாதிபதி நிகலஸ் மதுரோ உண்ணுகின்ற உணவில் இருந்து அனைத்தையும் கண்காணித்து நேரம் குறிக்கப்பட்ட பின்புதான் அவரை தூக்கினோம்”” என்று அமெரிக்க பாதுகாப்பு அதிகாரி குறிப்பிட்டிருந்தார்.

 இதிலிருந்து என்ன புரிகிறது ? அவர் எவ்வாறு, எங்கிருந்து கண்காணிக்கப்பட்டார் ? என்பதுதான் கேள்வியாகும். அமெரிக்கா தனது வரலாற்றில் ஒருபோதும் “நேரடியாக” போர் செய்து எதனையும் சாதித்ததில்லை. 

“குறுக்கு வழியில்” சென்றுதான் அவர்களது இலக்கை அடைவார்கள். உலகில் எந்த மூலையிலாவது ஒருவர் இலக்கு வைக்கப்பட்டால், அவருக்கு அருகில் உள்ளவர்களுக்கு போதிய விலை நிர்ணயிக்கப்படும்.

 உலக வரலாற்றில் ஏராளமான அரச தலைவர்கள் அமெரிக்காவினால் இலக்கு வைக்கப்பட்டிருந்தும், அதில் இலக்கு தவறியவர்களும் உள்ளனர்.

 சதாம் ஹுசைன், கடாபி, சிரியா அதிபர் பசர் அல்-அசாத், சூடான் ஜனாதிபதி ஓமர் அல்-பசீர் போன்ற தலைவர்கள் ஆட்சியில் இருக்கும் வரைக்கும் அவர்களை கொலை செய்வது அல்லது கடத்துவது போன்ற அமெரிக்காவின் எந்த திட்டங்களும் பலிக்கவில்லை.

 இவர்களெல்லாம் ஆட்சியில் இருக்கும்போது தங்களது பாதுகாப்புக்காக நிலையான இருப்பிடங்களில் வசிக்கவில்லை. அரண்மனையில் வசிப்பது போன்று மக்களுக்கு தெரிந்தாலும், நம்ப முடியாத இடங்களில் திடீர் திடீரென பாதுகாப்பு ஏற்பாடுகளை மாற்றிக்கொண்டே இருந்தார்கள்.

 1986 இல் லிபியா அதிபர் கடாபியை இலக்கு வைத்து நள்ளிரவு வேளையில் தலைநகர் Tripoli, Benghazi ஆகிய நகரங்கள்மீது அமெரிக்கா நடாத்திய திடீர் விமான தாக்குதலில் கடாபியின் மகள் ஹனா கடாபி உயிரிழந்ததுடன், குடும்ப உறுப்பினர்கள் காயமடைந்தனர் இந்த வரலாற்றுப்பாடம் ஜனாதிபதி மதுரோவுக்கு தெரியாமலில்லை. 

ஆனால் அவர் தனது பாதுகாப்பு விடயத்தில் அருகில் இருந்தவர்களை அதிகம் நம்பியது முதலாவது தவறு. பல மாதங்களாக வெனிசுவேலா கடற்பரப்பில் அமெரிக்க படைகள் நிலைகொண்டு கண்காணித்து வந்ததுடன், எந்த நேரமும் அமெரிக்கா போர் தொடுக்கலாம் என்ற பதட்டம் நிலவிய நிலையில், தனது உத்தியோகபூர்வ ஆடம்பர இல்லத்தில் வசித்துவந்தது மகா முட்டாள்தனம்.

 ஜனாதிபதி மதுரோவும் அவரது மனைவியும் படுக்கை அறைக்கு சென்ற பின்புதான் படை நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டதாக கூறப்படுகின்றது. 

அதுவரைக்கும் ஜனாதிபதி மதுரோ பற்றிய துல்லியமான தகவல்களை CIA க்கு வழங்கிக்கொண்டிருந்தது யார் ? இந்த படை நடவடிக்கையில் எத்தனை பேர் கொல்லப்பட்டார்கள் ? ஜனாதிபதியின் மெய்க்காப்பாளர்கள் எத்தனைபேர் கொல்லப்பட்டனர் ? ஏன் படை அதிகாரிகள் கைது செய்யப்படவில்லை ? அனைத்தும் மர்மமாகவே உள்ளது.

 இன்னும் காலங்கள் சென்றபின்புதான் உண்மை வெளியே வரும்.

நன்றி

முகம்மத் இக்பால் சாய்ந்தமருது

 “இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் LANKA4 ஊடகத்துடன் இணைந்திருங்கள்”



உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!