பிலிப்பைன்ஸ் சிறையில் உயிரிழந்த சுவிஸ் போதைப்பொருள் கடத்தல்காரர்
#Death
#Switzerland
#Women
#Prison
#drugs
#Smuggling
Prasu
1 hour ago
மணிலா விமான நிலையத்தில் ஆறு கிலோகிராம் மெத்தம்பேட்டமைனுடன் கைது செய்யப்பட்ட சுவிஸ்-ஸ்வீடிஷ் இரட்டை குடிமகன் ஒருவர் பிலிப்பைன்ஸ் சிறையில் உயிரிழந்துள்ளார்.
மரணத்திற்கு பிறகு அந்தப் பெண்ணின் உறவினர்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதாகவும் மரணத்திற்கான காரணம் இதுவரை தெரியவில்லை எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சுவிஸ்-ஸ்வீடிஷ் இரட்டை குடிமகனான அந்த பெண் செப்டம்பரில் போதைப்பொருள் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார்.
குறித்த பெண்ணின் சூட்கேஸில் கண்டுபிடிக்கப்பட்ட கிறிஸ்டல் மெத் என்று அழைக்கப்படும் கடத்தப்பட்ட போதைப்பொருட்களின் மதிப்பு அரை மில்லியன் பிராங்குகளுக்கு மேல் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
(வீடியோ இங்கே )