யூரோவிஷன் கோப்பையை திருப்பித் தரும் சுவிஸ் பாடகர் நீமோ

#Switzerland #Israel #Award
Prasu
1 hour ago
யூரோவிஷன் கோப்பையை திருப்பித் தரும் சுவிஸ் பாடகர் நீமோ

கடந்த ஆண்டு யூரோவிஷன் பாடல் போட்டியில் வெற்றி பெற்ற சுவிஸ் பாடகர் நீமோ, இஸ்ரேல் தொடர்ந்து இந்த நிகழ்வில் பங்கேற்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தனது கோப்பையை திருப்பித் தருவதாகக் கூறியுள்ளார்.

 போட்டியில் இஸ்ரேலின் ஈடுபாட்டிற்கு எதிர் தெரிவிக்கும் வகையில் 26 வயதான சுவிஸ் பாடகர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

யூரோவிஷன் பாடல் போட்டியின் இயக்குனர் மார்ட்டின் கிரீன், யூரோவிஷன் இந்த முடிவால் "வருத்தமடைந்ததாகவும்" நீமோவின் கருத்துக்களை மதிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

அடுத்த வருட யூரோவிஷன் பாடல் போட்டியில் இஸ்ரேல் போட்டியிட அனுமதிக்கப்பட்டுள்ளதால் ஐஸ்லாந்து, ஸ்பெயின், அயர்லாந்து, ஸ்லோவேனியா மற்றும் நெதர்லாந்து ஆகிய ஐந்து நாடுகள் நிகழ்வைப் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!