பிரான்சில் சமூக ஊடகங்களில் இருந்து சிறுவர்களை தடை செய்ய திட்டம்
#France
#children
#Social Media
#Ban
Prasu
1 hour ago
பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன், 15–16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்ய வேண்டும் என்று அறிவித்துள்ளார்.
பிரெஞ்சு ஜனாதிபதி கூறுகையில், அனைத்து சமூக வலைப்பின்னல்களிலும் கட்டாய வயது சரிபார்ப்பு அறிமுகப்படுத்தப்படும், குறைந்தபட்ச வயது 15–16 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
18 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் டீனேஜர்கள் சமூக ஊடக தளங்களை அணுகுவதில் கடுமையான கட்டுப்பாடுகளை எதிர்கொள்வார்கள் என்று தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இது தொடர்புடைய மசோதாவை முன்வைக்க திட்டமிட்டுள்ளதாக மக்ரோன் தெரிவித்துள்ளார்.
மேலும் 2027 இல் தனது ஜனாதிபதி பதவிக்காலம் முடிவதற்குள் அதை நிறைவேற்றுவதே தனது குறிக்கோள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
(வீடியோ இங்கே )