இன்றைய ராசிபலன் (06.12.2025) - 12 ராசிகளுக்கும் உள்ளே பலன்கள் உள்ளன

#Astrology #Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan #Lanka4
Prasu
1 hour ago
இன்றைய ராசிபலன் (06.12.2025) - 12 ராசிகளுக்கும் உள்ளே பலன்கள் உள்ளன

மேஷம்:

அசுவினி: முயற்சியால் முன்னேற்றம் காணும் நாள். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.

பரணி: உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். வெளியூர் பயணம் ஆதாயம் தரும்.

கார்த்திகை 1: பணியிடத்தில் செல்வாக்கு உயரும். வியாபாரத்தில் வாடிக்கையாளர் விருப்பமறிந்து செயல்படுவீர்.

ரிஷபம்:

கார்த்திகை 2,3,4: குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும். பணவரவு திருப்தி தரும்.

ரோகிணி: நேற்றைய நெருக்கடி நீங்கும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்.

மிருகசீரிடம் 1,2: வியாபாரத்தில் பிரச்னைகளை சந்தித்தாலும், சமாளித்து நினைத்ததை அடைவீர்.

மிதுனம்:

மிருகசீரிடம் 3,4: அலைச்சலும் செலவும் அதிகரிக்கும் என்றாலும் உங்களது முயற்சி வெற்றியாகும்.

திருவாதிரை: குழப்பத்திற்கு இடம் கொடுக்காமல் செயல்படுவதும், வாக்கு வாதங்களைத் தவிர்ப்பதும் நல்லது.

புனர்பூசம் 1,2,3: சிறு வியாபாரிகள் தங்கள் வியாபாரத்தில் கவனமுடன் செயல்படுவது அவசியம்.

கடகம்:

புனர்பூசம் 4: அலைச்சல் அதிகரிக்கும் நாள். எதிர்பாராத செலவுகளால் சங்கடம் ஏற்படும்.

பூசம்: நீங்கள் நினைப்பது ஒன்றாகவும் நடப்பது வேறாகவும் இருக்கும். அமைதியாக இருங்கள்.

ஆயில்யம்: சோதனைகளை சந்தித்து சாதனை புரிவீர். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும்.

சிம்மம்:

மகம்: நினைப்பது நடந்தேறும் நாள். குடும்பத்தினரின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்.

பூரம்: வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். பணவரவு திருப்தி தரும்.

உத்திரம் 1: திட்டமிட்டு செயல்பட்டு லாபம் காண்பீர். வெளியூர் பயணம் ஆதாயம் தரும்.

கன்னி:

உத்திரம் 2,3,4: நன்மையான நாள். வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும்.

அஸ்தம்: பணியிடத்தில் உங்கள் திறமைக்கு மதிப்புண்டாகும். சிலர் புதிய முயற்சியில் ஈடுபடுவீர்கள்.

சித்திரை 1,2: வியாபாரத்தில் எதிர்பார்த்த ஆதாயம் காண்பீர். அந்நியர்கள் உதவியால் விருப்பம் நிறைவேறும்.

துலாம்:

சித்திரை 3,4: நெருக்கடிகள் நீங்கும் நாள். தெய்வ பலத்தால் உங்கள் விருப்பங்கள் பூர்த்தியாகும்.

சுவாதி: விஐபி களை சந்திப்பீர். பழைய பிரச்னைகள் இன்று முடிவிற்கு வரும்.

விசாகம் 1,2,3: நேற்றுவரை உங்களை சங்கடப்படுத்திய நெருக்கடி விலகும். எதிர்பார்த்த பணம் வரும்.

விருச்சிகம்:

விசாகம் 4: கவனமுடன் செயல்பட வேண்டிய நாள். அலைச்சல் அதிகரிக்கும்.

அனுஷம்: ஒவ்வொரு வேலையிலும் விழிப்புடன் செயல்படுவது நன்மை தரும்.

கேட்டை: வேலைகளில் எதிர்பாராத சங்கடம் உண்டாகும். வாக்கு வாதங்களைத் தவிர்க்கவும்.

தனுசு:

மூலம்: மகிழ்ச்சியான நாள். வாழ்க்கைத் துணையின் ஆதரவால் திட்டமிட்ட வேலைகளை முடிப்பீர்.

பூராடம்: வெளியூர் பயணத்தில் உங்கள் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். அலுவலகத்தில் இருந்த நெருக்கடி நீங்கும்.

உத்திராடம் 1: சங்கடங்கள் தீரும். எதிர்பார்த்த பணம் வரும். கூட்டுத்தொழில் முன்னேற்றம் அடையும்.

மகரம்:

உத்திராடம் 2,3,4: பகைவர்களின் தொல்லைகள் விலகும். உடல்நிலை சீராகும்.

திருவோணம்: போட்டியாளரால் ஏற்பட்ட சங்கடம் காணாமல் போகும். வழக்கு விவகாரம் சாதகமாகும்.

அவிட்டம் 1,2: எடுத்த வேலைகள் நடந்தேறும். பணியாளர்களுக்கு மேல் அதிகாரியின் ஆதரவு கிடைக்கும்.

கும்பம்:

அவிட்டம் 3,4: தடுமாற்றத்திற்கு ஆளாகும் நாள். அவசர முடிவால் நெருக்கடியை சந்திப்பீர்.

சதயம்: பணியிடத்தில் சிறு பிரச்னைகள் தோன்றும். சாதுரியமாக செயல்பட்டு அதற்கு தீர்வு காண்பீர்.

பூரட்டாதி 1,2,3: பூர்வீக சொத்தில் ஏற்பட்ட பிரச்னை மீண்டும் தோன்றும். உறவுகளால் நெருக்கடிக்கு ஆளாவீர்.

மீனம்:

பூரட்டாதி 4: அலைச்சல் அதிகரிக்கும் நாள். உங்களது வேலையில் எதிர்பாராத சங்கடங்களை சந்திப்பீர்.

உத்திரட்டாதி: தாய்வழி உறவுகளின் உதவியால் உங்கள் வேலைகளை நடத்தி முடிப்பீர்.

ரேவதி: வியாபாரத்தில் உங்கள் எதிர்பார்ப்பு இழுபறியாகும். நிதானம் காப்பது நல்லது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
சிறப்பு கட்டுரை