வெளிநாட்டிலிருந்து சட்டவிரோத பொருட்களை வாங்கும் சுவிஸ் மக்கள்!

#swissnews
Mayoorikka
1 hour ago
வெளிநாட்டிலிருந்து சட்டவிரோத பொருட்களை வாங்கும் சுவிஸ் மக்கள்!

சுவிற்சர்லாந்துவாழ் மக்கள் வெளிநாட்டிலிருந்து சட்டவிரோத பொருட்கள் , ஆயுதங்கள், போலியான பிராண்டுகள், போலியான மருந்துகள் போன்றவை ஓர்டர் செய்து வாங்குகின்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

 சுவிற்சர்லாந்து ஆய மற்றும் எல்லை பாதுகாப்பு நிறுவனங்கள் (BAZG), இந்த வாரத்தில் ஆயிரத்திற்கு மேற்பட்ட சட்டவிரோத அனுப்பல்களை தடுத்து நிறுத்தியுள்ளன. நாளொன்றுக்கு 600 000 இத்தகைய பொதிகள் சுவிற்சர்லாந்துக்கு அனுப்பப்படுகின்றன. 

images/content-image/1764569944.jpg

முழுமையாக அனைத்தையும் சோதனை செய்ய முடியாவிட்டாலும் சந்தேகத்துக்குரிய பொதிகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு மருந்துகள், ஆயுதங்கள், போலியான பிராண்டுகள் பிடிக்கப்பட்டன. இவற்றில் விற்றமின்கள், கோவிட்-19 மற்றும் புற்றுநோய் எதிர்ப்பு மருந்துகள். 

இவற்றுள் 80வீதமானவை மருத்துவ சக்தி மேம்பாட்டு மருந்துகள் ஆகும். பெரும்பாலான மருந்துகள் இந்தியாவில் இருந்து அனுப்பிவைக்கப்படுகின்றன. 

images/content-image/1764569958.jpg

 அனபோலிகா போன்ற ஹார்மோன் வளர்ச்சி மருந்துகள். இவை பெரும்பாலும் 13 வயது குழந்தைகளால் TikTok மூலம் ஓடர் செய்யப்படுகின்றன. போலியான பிராண்டுகள் பெரும்பாலும் சீனாவில் இருந்து வருகின்றன. ஆயுதங்கள் மற்றும் பிற பொருட்கள் தாக்குதல் கம்பிகள், டிராக்ஸ், லேசர் ஆயுதங்கள், அத்துடன் பல மிகவும் அச்சுறுத்தும் பொருட்கள்.

 இவற்றை ஆய்வுக்குட்படுத்துவதில் தாம் பெரும் சவாலை எதிர் நோக்குவதாக சுவிற்சர்லாந்தின் ஆயப்பகுதி தெரிவித்துள்ளது.

ஆயப்பகுதியினர் பிடிக்கப்பட்ட அனைத்துப் பொருட்களையும் தொடர்புடைய பிரிவுக்கு ஒப்படைக்கின்றனர். 

இத்தகைய பொருட்களை ஓடர் செய்பவர்களுக்கு குற்றப்பணம் அல்லது தண்டனை வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஆயப்பகுதி மேலும் தெரிவித்துள்ளது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

அனுசரணை

images/content-image/1754511373.jpg


உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
சிறப்பு கட்டுரை