பிரான்ஸ் அருங்காட்சியக கொள்ளை தொடர்பில் மேலும் நால்வர் கைது
#Arrest
#France
#Robbery
#museum
Prasu
1 month ago
கடந்த மாதம் பிரான்சில் லூவ்ரே அருங்காட்சியகத்தில் இருந்து நகைகள் திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் 38, 39 வயதுடைய இரண்டு ஆண்கள் மற்றும் 31, 40 வயதுடைய இரண்டு பெண்கள் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், சம்பவம் தொடர்பாக இதுவரை 8 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.
அக்டோபர் 19ம் திகதி உலகின் பிரபலமான அருங்காட்சியத்தில் ஒன்றான லூவ்ரே அருங்காட்சியத்தில் கொள்ளையர்கள் சுமார் 88 மில்லியன் யூரோ பெறுமதியான நகைகளை கொள்ளையடித்து சென்றனர்.
(வீடியோ இங்கே )