ஆசியாவிற்கான ஐந்து நாள் பயணத்தை ஆரம்பித்த கனடாவின் தொழில் அமைச்சர்
கனடாவின் தொழில் அமைச்சர் மெலனி ஜோலி, ஆசியாவிற்கான ஐந்து நாள் விஜயத்தை ஆரம்பித்துள்ளார்.
நாட்டின் பாதுகாப்பு தொடர்பான துறைகளில் வெளிநாட்டு முதலீடுகளை பெருமளவில் ஈர்ப்பதற்கான முயற்சியின் பகுதியாக இந்த விஜயம் அமைந்துள்ளது.
இந்தப் பயணத்தின் போது ஏற்றுமதிகளை விரைவாக அதிகரிக்கும் திட்டத்திற்கான முக்கிய நிறுவனங்களுடன் சந்திப்புகள் நடைபெறவுள்ளது.
மேலும், கனடாவின் புதிய நீர்மூழ்கிக் கப்பல் கொள்முதல் திட்டம் தொடர்பாக இரண்டு நிறுவனங்களில் பேச்சுவார்த்தைகள் நடத்தவுள்ளார்.
ஜோலி, தென் கொரியாவின் முன்னணி தொழில்துறை குழுமமான ஹன்வா நிறுவனத்தின் உயர் அதிகாரிகளை சந்திக்க உள்ளார்.
ஆட்டோமொபைல் மற்றும் பேட்டரி உற்பத்தி, கப்பல் கட்டும் தொழில், சுரங்கத் தொழில் மற்றும் பாதுகாப்புத் துறை முதலீடுகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் இந்த விஜயத்தில் கவனம் செலுத்தப்பட உள்ளது.
(வீடியோ இங்கே )