ட்ரோன்களை ஒழுங்குபடுத்துவதற்கான முறையான திட்டத்தை செயல்படுத்த தீர்மானம்!
#SriLanka
#Drone
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
9 hours ago
ட்ரோன்களை ஒழுங்குபடுத்துவதற்கான முறையான திட்டத்தை அறிமுகப்படுத்துவதாக சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.
இதன்படி வணிக மதிப்புள்ள அனைத்து ட்ரோன்களும் பதிவு செய்யப்பட வேண்டும் என்று அதன் இயக்குநர் ஜெனரல் கேப்டன் தமிந்த ரம்புக்வெல்ல கூறியுள்ளார்.
இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர், "சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் இந்த ட்ரோன்களை ஒழுங்குபடுத்துகிறது. உண்மையில், இங்கே இரண்டு பகுதிகள் உள்ளன.
அதாவது, மக்களை ஏற்றிச் செல்லும் ட்ரோன்கள் மற்றும் ஆளில்லா ட்ரோன்கள். இவற்றிற்காக, சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் சில விதிமுறைகளை வகுத்துள்ளது. இந்த ஆண்டு முதல் அவற்றை நாங்கள் செயல்படுத்த உள்ளோம்” எனத் தெரிவித்துள்ளார்.
இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் LANKA4 ஊடகத்துடன் இணைந்திருங்கள்