இந்த வாரம் யாருக்கு என்ன நடக்கும்? 12 ராசிகளுக்கும் பலன்கள் உள்ளே (வீடியோ இணைப்பு)
மேஷம்
தாராள மனமும், அன்பு நெஞ்சமும் உடைய மேஷம் ராசியினரை விட்டு விலகிய உறவுகள் நாடி வரும். குரு, சுக்கிரன் ஆகியோரால் எதிர்பார்த்த சுபச் செய்திகள் வீடு வந்து சேரும்.
உற்பத்தி தொழில்துறையினர் லாபம் அடைவர். வியாபாரிகள் தொழில் வெற்றிக்கான விஷயங்களை அறிந்து செயல்படுவர். உத்தியோகஸ்தர்கள் அலுவலக சிக்கல்களில் சமாளித்து வெற்றி பெறுவர்.
ரியல் எஸ்டேட்டில் அளவாக நன்மை உண்டு. ஷேர் மார்க்கெட்டில் எரிவாயு நிறுவன பங்குகளில் ஆதாயம் அடைவர். மாணவர்கள் உறவினர் வீட்டு விஷேசங்களில் கலந்து கொண்டு மகிழ்வர்.
மன உளைச்சல், உடல் சோர்வு ஏற்பட்டு மருத்துவ சிகிச்சை மூலம் விலகும். பெருமாள் கோவிலுக்கு வெள்ளி பொருளை தானம் செய்வதால் சிக்கல்கள் விலகி நன்மை நாடி வரும்.
ரிஷபம்
பிடிவாதமும், அழகை ரசிக்கும் இயல்பும் கொண்ட ரிஷபம் ராசியினர் எதிர்கால நன்மைக்குரிய திட்டங்களை செயல்படுத்துவார்கள். ராசி அதிபதி சுக்கிரன் அந்தஸ்தையும், கௌரவத்தையும் உயர்த்துவார்.
தொழில்துறையினர் தடை கடந்து வெற்றி அடைவார்கள். வியாபாரிகள் முன்னேற்றப் பாதையில் செல்வார்கள். உத்தியோகஸ்தர்கள் பணியிட சிக்கல் விலகி நன்மை அடைவர்.
ரியல் எஸ்டேட்டில் தொழில் விருத்தி உண்டு. ஷேர் மார்க்கெட்டில் கட்டிட பொருள் தயாரிப்பு நிறுவன பங்குகளில் லாபமுண்டு. மாணவர்கள் தேர்வில் நல்ல மதிப்பெண் பெற தேவையான ஆலோசனை பெறுவர்.
இருமல், மூச்சுத்திணறல் ஏற்பட்டு சிகிச்சையால் அகலும். இரவு அதிக நேரம் கண் விழிப்பதை தவிர்க்கவும். வெள்ளை நிற பொருட்களை தானமாக கொடுப்பதன் மூலம் நன்மைகள் நாடி வரும்.
மிதுனம்
புத்திசாலித்தனமும், விசுவாசமும் உள்ள மிதுனம் ராசியினர் குடும்ப, சமூக நற்காரியங்களில் ஈடுபட்டு பெயர் பெறுவர். ராசி அதிபதி புதன் மனதில் தைரியத்தை ஏற்படுத்துவார்.
சிந்தனை தெளிவாகும். தொழில் துறையினர் சிரமங்களை கடந்து வெற்றி பெறுவார்கள். சில்லறை வியாபாரிகள் புதிய கூட்டாளிகள் கிடைத்து முன்னேற்றம் அடைவர்.
உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்தில் நல்ல மாற்றங்களை சந்திப்பார்கள். ரியல் எஸ்டேட்டில் நீர்நிலை உள்ள பகுதிகளில் புதிய திட்டங்களை தொடங்குவர். ஷேர் மார்க்கெட்டில் ஏற்றுமதி நிறுவன பங்குகளில் ஆதாயம் பெறுவர். மாணவர்கள் ஏ.ஐ., கணினி பயிற்சிகளில் பங்கு பெறுவார்கள்.
வாயு தொல்லை, நரம்பு பிரச்சனை ஏற்பட்டு சிகிச்சையால் அகலும். முதியோர்களுக்கு இரவில் அன்னதானம் செய்வதும், பெருமாள் கோவிலுக்கு வாசனை திரவியங்கள் சமர்ப்பிப்பதும் நன்மை தரும்.
கடகம்
மனதில் மென்மையும், வலிமையும் கொண்ட கடகம் ராசியினர் நன்மை தரும் புதிய தொடர்புகளை பெறுவார்கள். சனி, சுக்கிரன் மனதில் புதிய நம்பிக்கையை உருவாக்குவார்கள்.
தொழில்துறையினர் நல்ல முன்னேற்றம் அடைவார்கள். வியாபாரிகள் எதிர்பார்த்த லாபமடைய நேரம் பார்க்காமல் உழைக்க வேண்டும். உத்தியோகஸ்தர்கள் உயர் அதிகாரிகள் மூலம் ஆதாயம் பெறுவர்.
ரியல் எஸ்டேட்டில் பெருநகர கட்டுமான திட்டங்களை தொடங்குவர். ஷேர் மார்க்கெட்டில் வேளாண் நிறுவன பங்குகளில் லாபம் அடைவர். மாணவர்கள் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
சுவாசக்கோளாறு, காய்ச்சல் ஏற்பட்டு மருத்துவத்தால் குணமாகும். கோவிலுக்கு பச்சரிசி தானம், ஏழை பெண்மணிகளுக்கு ஆடைதானம் செய்வதால் நன்மைகள் பல நாடி வரும்.
சிம்மம்
சபைக்கூச்சம், மற்றவர் கருத்தை மதிக்கும் குணம் உள்ள சிம்மம் ராசியினருக்கு ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டு. குரு தெளிவான சிந்தனையை ஏற்படுத்தி, காரிய வெற்றி தருவார்.
தொழில் துறையினர் தடை பல கடந்து வெற்றி பெறுவர். வியாபாரிகள் நீண்ட காலமாக மனதில் நினைத்த திட்டங்களை நிறைவேற்றுவார்கள். உத்தியோகஸ்தர்கள் நிர்வாகம் மூலம் எதிர்பாராத நன்மைகளை பெறுவர்.
ரியல் எஸ்டேட்டில் பழைய கடன் தீர்ந்து புதிய கடன் உருவாகும். ஷேர் மார்க்கெட்டில் ஹோட்டல் நிறுவன பங்குகளில் லாபம் உண்டு. மாணவர்கள் கம்ப்யூட்டர் மற்றும் இன்ஜினியரிங் பாடங்களில் நல்ல மதிப்பெண் பெறுவர்.
வேலைப்பளு காரணமாக உடல் அசதி, ஞாபக மறதி ஏற்பட்டு விலகும். தலைசுற்றல் இருந்தால் மருத்துவ பரிசோதனை செய்யவும். ஏழைகளுக்கு அன்னதானம் வழங்குவதால் சிக்கல்கள் விலகி நன்மை ஏற்படும்.
கன்னி
வேடிக்கையான சுபாவம், துன்பங்களை ஏற்கும் மனப்பக்குவம் உள்ள கன்னி ராசியினர் தெய்வ வழிபாடுகளில் ஈடுபடுவர். சுக்கிரன், புதன் பேச்சில் இனிமை கூட்டி காரிய வெற்றி ஏற்படுத்துவார்கள்.
தொழில் துறையினர் எதிர்பார்த்த லாபம் பெறுவார்கள். வியாபாரிகள் திட்டமிட்ட வகையில் தொழில் விருத்தி செய்யலாம். உத்தியோகஸ்தர்கள் நிதானமாகவும், சமயத்திற்கு ஏற்பவும் நடந்து கொள்ளவும்.
ரியல் எஸ்டேட்டிலும், ஷேர் மார்க்கெட்டிலும் புதிய முதலீடுகளை செய்வதற்கான நேரம் இது. மாணவர்கள் உயர்கல்வி பெறுவதற்கான தொழில்நுட்ப ஆலோசனைகளை பெறுவார்கள்.
மனதில் சோர்வு ஏற்படுவதால் அது உடலில் பிரதிபலிக்கும். நல்ல உறக்கமும் ஓய்வும் தேவை. கடலில் அல்லது நதியில் நீராடுவது, கோவில் குளங்களிலுள்ள மீன்களுக்கு உணவிடுவது நன்மை தரும்.
துலாம்
மற்றவர் நலனை கருத்தில் கொண்டு செயல்படும் துலாம் ராசியினருக்கு நண்பர்கள் மூலம் நன்மைகள் ஏற்படும். சுக்கிரன், சந்திரன் ஆகிய கிரகங்கள் நல்ல, புதிய தொடர்புகளை ஏற்படுத்துவார்கள்.
தொழில் துறையினர் சிறிய திட்டங்கள் மூலம் பெரிய லாபங்களை அடைவார்கள். விவசாய விளைபொருள் வியாபாரிகள் நன்மை பெறுவர். பணி உயர்வை எதிர்பார்த்த உத்தியோகஸ்தர்களுக்கு அது கிடைக்கும்.
ரியல் எஸ்டேட்டில் நடப்பு திட்டங்களை கவனிக்க வேண்டும். ஷேர் மார்க்கெட்டில் பொதுத்துறை நிறுவனப் பங்குகளில் லாபம் உண்டு. மாணவர்கள் கல்விச் சுற்றுலா சென்று அறிவு விருத்தி அடைவர்.
மனதிலும் உடலிலும் ஒருவகை சோர்வு ஏற்பட்டு மருத்துவ சிகிச்சையால் குணமாகும். பெருமாள் கோவிலுக்கு நாட்டு சர்க்கரை மற்றும் தேன் தானம் செய்வதால் நன்மைகள் நாடி வரும்.
விருச்சிகம்
உண்மை அன்பும், பழக இனிமையும் கொண்ட விருச்சிகம் ராசியினர் மனதில் உற்சாகமாக செயல்பட்டு காரிய வெற்றி பெறுவார்கள். ராசி அதிபதியும், சுப கிரகங்களும் வலுவாக இருப்பது நன்மை தரும்.
தொழில் துறையினர் திட்டமிட்டு தொழில் விரிவாக்கம் செய்யலாம். வியாபாரிகளுக்கு திடீர் செலவு ஏற்பட்டு சமாளிப்பர். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளை மற்றவர்களிடம் ஒப்படைப்பது கூடாது.
ரியல் எஸ்டேட்டில் புதிய முதலீடுகளை செய்யலாம். ஷேர் மார்க்கெட்டில் திரவ பொருள் நிறுவன பங்குகளில் லாபம் உண்டு. மாணவர்கள் விளையாட்டு மற்றும் படிப்பில் சம அளவு கவனம் செலுத்த வேண்டும்.
மனதில் சோர்வு, உடல் சோர்வு ஏற்பட்டு ஓய்வெடுப்பதன் மூலம் சரியாகும். கோவிலுக்கு மஞ்சள் நிற பொருட்களை தானமாக தருவதாலும், பெருமாள் கோவிலில் புளியோதரை தானம் செய்வதாலும் நன்மைகள் நாடி வரும்.
தனுசு
இனிமையாக பேசுவதுடன், தனிமையில் சிந்தித்துக் கொண்டிருக்கும் தனுசு ராசியினர் எதிர்பார்த்த தன வரவை பெறுவர். சுக்கிரன், சந்திரன் ஆகிய கிரகங்கள் மனதில் எழுந்த விருப்பத்தை பூர்த்தி செய்வார்கள்.
தொழில்துறையினருக்கு எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டு. வியாபாரிகள் புதிய முதலீடு மற்றும் தொழில் விரிவாக்கத்தில் கவனமாக செயல்பட வேண்டும். உத்தியோகஸ்தர்கள் மனநிம்மதி பெறுவார்கள்.
ரியல் எஸ்டேட்டில் புதிய திட்டங்களை தொடங்கலாம். ஷேர் மார்க்கெட்டில் ஜவுளி நிறுவன பங்குகளில் ஆதாயம் உண்டு. மாணவர்கள் புதிய நண்பர்கள் மூலம் எதிர்கால நலனுக்கான செய்திகளை பெறுவார்கள்.
உடலில் சோர்வு ஏற்பட்டாலும் ஓய்வு எடுத்துக்கொண்டு உற்சாகத்தோடு செயல்படுவீர்கள். கோவிலுக்கு அல்லது ஆதரவற்றவர்களுக்கு சிவந்த நிற பொருட்களை தானமாக கொடுப்பதால் நன்மைகள் நாடி வரும்.
மகரம்
வேடிக்கையும், காரியங்களில் கவனமும், நேர்மையும் கொண்ட மகரம் ராசியினருக்கு மகிழ்ச்சியான சம்பவங்கள் நடந்தேறும். சுக்கிரன், செவ்வாய் பல நல்ல விஷயங்களை கொண்டு வந்து சேர்ப்பார்கள்.
தொழில்துறையினருக்கு முன்னேற்றமான வாரம். வியாபாரிகள் தொழில் விரிவாக்கம் செய்வதற்கு திட்டமிடலாம். உத்தியோகஸ்தர்களுக்கு உயர் அதிகாரிகள் அல்லது நிர்வாகத்தின் சார்பில் பாராட்டு கிடைக்கும்.
ரியல் எஸ்டேட்டில் புதிய முதலீடுகளை செய்யலாம். ஷேர் மார்க்கெட்டில் பெட்ரோலிய நிறுவன பங்குகளில் லாபம் உண்டு. மாணவர்கள் வெளிநாட்டு கல்வி பெறுவதற்கான கூடுதல் தகவல்களை பெறுவார்கள்.
நடுத்தர வயதில் உள்ளவர்கள் ரத்த அழுத்த, சர்க்கரை பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். கருப்பு நிற பொருள்களை மாலை நேரங்களில் கோவிலுக்கு அல்லது முதியோர்களுக்கு தானம் தந்தால் நல்லது நடக்கும்.
கும்பம்
சிந்தித்து முடிவெடுப்பதுடன், ரகசியங்களையும் பாதுகாக்கும் கும்பம் ராசியினருக்கு பல சிக்கல்கள் அகன்று மனதில் நம்பிக்கை உருவாகும். குரு, சுக்கிரன் இல்லத்தில் மகிழ்ச்சியை ஏற்படுத்துவார்கள்.
தொழில்துறையினருக்கு தடை இருந்தாலும் லாபம் குறையாது. வியாபாரிகளுக்கு சிக்கல் ஏற்பட்டாலும் அதற்கு ஏற்ற வரவு உண்டு. உத்தியோகஸ்தர்கள் புதிய தொழில்நுட்பங்களை கற்கும் சூழல் ஏற்படும்.
ரியல் எஸ்டேட்டில் புதிய வாடிக்கையாளர்களால் நன்மை உண்டு. ஷேர் மார்க்கெட்டில் சினிமா மற்றும் தொலைக்காட்சி நிறுவன பங்குகளில் லாபம் உண்டு. மாணவர்கள் பெற்றோர் சொல் கேட்டு நடப்பது நல்லது.
அரை வயிறு சாப்பிடுவதும், சரியான நேரத்திற்கு உறங்கி விழிப்பதும் ஆரோக்கியத்திற்கு ஏற்றது. ஆஞ்சநேயர் அல்லது பைரவர் கோவிலுக்கு பேரிச்சம்பழம் மற்றும் தேன் தானம் செய்ய நன்மை உண்டு.
மீனம்
வெள்ளை உள்ளமும், பிறர் மீது அக்கறையுள்ள இதயமும் கொண்ட மீனம் ராசியினர் மனதில் தெளிவான சிந்தனை ஏற்படும். ராசி அதிபதி வலுவாக இருப்பதால் நினைத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும்.
தொழில் துறையினர் நீண்ட நாட்களாக நினைத்த விஷயத்தை செய்து முடிப்பார்கள். வியாபாரிகள் தொழில் விரிவாக்க பணியை செய்யலாம். உத்தியோகஸ்தர்களுக்கு சக ஊழியர் உதவியால் நன்மை உண்டு.
ரியல் எஸ்டேட்டில் நினைத்த விசயங்கள் கைகூடி வரும். ஷேர் மார்க்கெட்டில் பெட்ரோலிய நிறுவன பங்குகளில் லாபம் கிடைக்கும். மாணவர்கள் விளையாட்டில் திறமைகளை வெளிப்படுத்தி வெற்றி பெறுவர்.
சளி, காய்ச்சல், தலைவலி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டு வைத்தியத்தால் குணமடையும். கோவில்களில் நடைபெறும் அன்னதானங்களுக்கு இயன்றவரை பொருள் தானம், தானியம் தானம் செய்வது நல்லது.
(வீடியோ இங்கே )