இன்றைய ராசிபலன் (23.11.2025) - 12 ராசிகளுக்கும் உள்ளே பலன்கள் உள்ளன

#Astrology #Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasu
1 hour ago
இன்றைய ராசிபலன் (23.11.2025) - 12 ராசிகளுக்கும் உள்ளே பலன்கள் உள்ளன

மேஷம்

அசுவினி: நன்மையான நாள். உங்களுக்கு இருந்த நெருக்கடி விலகும். பெரியோர் உதவியால் வேலை நடக்கும். ஒரு சிலர் சுப நிகழ்ச்சியில் பங்கேற்பீர். பரணி: உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும். நினைத்ததை நடத்தி முடிப்பீர். பணியாளர்கள் சங்கடம் நீங்கும். விஐபிகள் ஆதரவு கிடைக்கும். பணவரவு திருப்தி தரும். கார்த்திகை 1: வியாபாரத்தில் இருந்த பிரச்னை முடியும். உங்கள் வேலைகளில் வெற்றி உண்டாகும். தந்தையால் ஆதரவு கிடைக்கும்.

ரிஷபம்

கார்த்திகை 2,3,4: நெருக்கடிக்கு ஆளாகும் நாள். நம்பிக்கையுடன் மேற்கொண்ட முயற்சி இழுபறியாகும். தேவையற்ற பிரச்னை தேடிவரும். ரோகிணி: மனக்குழப்பம் உண்டாகும். வேலையில் நெருக்கடி அதிகரிக்கும். இஷ்ட தெய்வத்தை வழிபட சங்கடம் நீங்கும். மிருகசீரிடம் 1,2: அலைச்சலும் செலவும் அதிகரிக்கும். வியாபாரத்தில் எதிர்பாராத தடைகளை சந்திக்க வேண்டியதாக இருக்கும். எதிர்பார்த்த வருமானம் தள்ளிப் போகும்.

மிதுனம்

மிருகசீரிடம் 3,4: மகிழ்ச்சியான நாள். நீங்கள் நினைப்பது நடக்கும். எதிர்பார்த்த பணம் வரும். குடும்ப நெருக்கடி நீங்கும். மகிழ்ச்சி அதிகரிக்கும். திருவாதிரை: நேற்றைய முயற்சி நிறைவேறும். வாழ்க்கைத் துணையின் உதவியால் உங்கள் விருப்பம் பூர்த்தியாகும். வெளியூர் பயணம் லாபம் தரும். புனர்பூசம் 1,2,3: கூட்டுத் தொழிலில் லாபம் கூடும். நண்பர்கள் உதவியால் வேலை நடக்கும். சிறிய முதலீட்டிலும் வருமானம் அதிகரிக்கும்.

கடகம்

புனர்பூசம் 4: நினைத்ததை சாதிக்கும் நாள். வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். மனக்குழப்பம் விலகும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். பூசம்: ஆரோக்கியம் சீராகும். இழுபறியாக இருந்த பிரச்னை முடிவிற்கு வரும். பணிபுரியும் இடத்தில் செல்வாக்கு உயரும். நேற்றைய எதிர்பார்ப்பு நிறைவேறும். ஆயில்யம்: குடும்பக் குழப்பம் நீங்கும். உங்களுக்கு எதிராக செயல்பட்டவர் மனம் மாறுவர். இழுபறியாக இருந்த விவகாரம் முடியும்.

சிம்மம்

மகம்: நிதானமாக செயல்பட வேண்டிய நாள். முயற்சியில் எதிர்பாராத தடை ஏற்படும். நினைத்த வேலைகளை நடத்திக் கொள்ள முடியாமல் போகும். பூரம்: எதிலும் உங்களுடைய நேரடிப் பார்வை இருப்பது அவசியம். யாரையும் நம்பி இன்று உங்களுடைய வேலைகளை ஒப்படைக்க வேண்டாம். உத்திரம் 1: பணிபுரியும் இடத்தில் நெருக்கடி தோன்றும். ஒருசிலர் கண்டிப்பிற்கு ஆளாவீர். குடும்பத்தினரை அனுசரித்துச் செல்வது நல்லது.

கன்னி

உத்திரம் 2,3,4: போராட்டமான நாள். பணிபுரியும் இடத்தில் வேலைபளு அதிகரிக்கும். நிர்வாகத்தினரால் நெருக்கடிக்கு ஆளாவீர். அஸ்தம்: தாய்வழி உறவுகளால் முயற்சி வெற்றியாகும். உழைப்பிற்கேற்ற வருமானம் வரும். வேலையில் நிதானம் அவசியம். வரவு செலவில் கவனம் தேவை. சித்திரை 1,2: உங்கள் முயற்சி தள்ளிப் போகும். பணிபுரியும் இடத்தில் உடன் பணிபுரிபவருடன் பகை உண்டாகும். உடலில் அசதியும் சோர்வும் ஏற்படும்.

துலாம்

சித்திரை 3,4: முயற்சி வெற்றியாகும் நாள். உங்களுடைய சிறிய முயற்சி கூட இன்று பெரிய அளவில் லாபம் தரும். எதிர்பார்த்த பணம் வரும். சுவாதி: இழுபறியாக இருந்த வேலை நடக்கும். சகோதரர் உங்களுக்கு உதவியாக இருப்பார். சொத்து வகையில் ஏற்பட்ட பிரச்னை முடியும். விசாகம் 1,2,3: வருமானத்தில் ஏற்பட்ட தடை விலகும். தொழில் முன்னேற்றம் அடையும். பணியாளர்களுக்கு எதிர்பார்த்த சலுகை கிடைக்கும்.

விருச்சிகம்

விசாகம் 4: நெருக்கடி நீங்கும் நாள். எதிர்பார்த்த பணம் வரும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர். மனக்குழப்பம் விலகும். அனுஷம்: குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். நீங்கள் மேற்கொள்ளும் வேலை லாபமாகும். திட்டமிட்டிருந்த வேலைகளை செய்து முடிப்பீர் கேட்டை: பணிபுரியும் இடத்தில் உங்கள் ஆலோசனைக்கு மதிப்பு அதிகரிக்கும். மற்றவரால் மதிக்கப்படுவீர். புதிய பாதை தெரியும்.

தனுசு 

மூலம்: குழப்பமின்றி செயல்பட வேண்டிய நாள். மற்றவர் செய்யும் விமர்சனங்களை பொருட்படுத்த வேண்டாம். எடுக்கும் வேலைகளில் உறுதியாக இருந்தால் லாபம் உண்டாகும். பூராடம்: ஒவ்வொரு வேலையிலும் நிதானமுடன் யோசித்து செயல்படுவது நல்லது. இறை வழிபாட்டால் துன்பம் நீங்கும். உத்திராடம் 1: திட்டமிட்டு செயல்படும் வேலைகளில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பணிபுரியும் இடத்தில் பிறரை அனுசரித்துச் செல்வது அவசியம்.

மகரம்

உத்திராடம் 2,3,4: அலைச்சல் அதிகரிக்கும் நாள். வரவை விட செலவு கூடுதலாகும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. பயணத்தில் எச்சரிக்கை அவசியம். திருவோணம்: மேற்கொள்ளும் முயற்சி இன்று இழுபறியாகும். பண நெருக்கடி ஏற்படும். குழப்பம் உண்டாகும். உடல் சோர்வடையும். அவிட்டம் 1,2: பொறுமையுடன் செயல்படுவதால் விரயத்தை தவிர்க்கலாம். வியாபாரத்தில் எதிர்பார்ப்பு தள்ளிப்போகும். செலவு அதிகரிக்கும்.

கும்பம்

அவிட்டம் 3,4: லாபமான நாள். நம்பிக்கையுடன் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். சதயம்: நேற்று வராமல் இருந்த பணம் வரும். இடம் சம்பந்தமான பிரச்னையில் முடிவு தோன்றும். நினைத்த வேலை நடக்கும். பூரட்டாதி 1,2,3: பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். திட்டமிட்டிருந்த வேலை நடக்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும். விருப்பம் பூர்த்தியாகும்.

மீனம்

பூரட்டாதி 4: வியாபாரத்தில் லாபம் காணும் நாள். செயலில் வேகமும் பரபரப்பும் இருக்கும். பிறரை நம்பி இன்று எந்த வேலையும் செய்ய வேண்டாம். உத்திரட்டாதி: வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னை முடியும். எதிர்பார்த்த இடத்திலிருந்து பணம் வரும். முயற்சி எளிதாகும். ரேவதி: உங்கள் முயற்சியில் லாபம் காண்பீர். பண விவகாரத்தில் ஏற்பட்ட தடை நீக்கும். பணிபுரியும் இடத்தில் செல்வாக்கு உயரும்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )


உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!