சுகாதாரத் துறை ஊழியர்களுக்கு நிரந்தர வதிவிட உரிமை வழங்கும் கனடா

#Canada #government #Health Department #Workers
Prasu
1 month ago
சுகாதாரத் துறை ஊழியர்களுக்கு நிரந்தர வதிவிட உரிமை வழங்கும் கனடா

மருத்துவ மற்றும் சமூக சேவைத் துறைகளில் நிலவும் தொழிலாளர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய 3,500 பேருக்கு நிரந்தர வதிவிட உரிமைகளை கனடா வழங்கியுள்ளது.

சமீப காலமாக கனடாவில், மருத்துவ மற்றும் சமூக சேவைத் துறைகளில் நிலவும் தொழிலாளர் பற்றாக்குறையை அடிப்படையாக வைத்து இந்த வதிவிட அழைப்புகள் வழங்கப்பட்டுள்ளது.

கனடாவில் மருத்துவமனைகள், அவசர சிகிச்சை, நீண்டகால பராமரிப்பு, மனநல ஆதரவு, சமூக சேவைகள் போன்ற துறைகளில் கடுமையான பணியாளர் பற்றாக்குறை நிலவுகிறது.

images/content-image/1763628079.jpg

இதனை சமாளிக்க, அனுபவமுள்ள நிபுணர்களை விரைவாக இணைத்துக்கொள்ளும் நோக்கில் இந்த உரிமைகள் வழங்கப்பட்டுள்ளன

இந்த பிரிவில் தகுதி பெற, விண்ணப்பதாரர்கள் கடந்த மூன்று ஆண்டுகளில் குறைந்தது 6 மாதங்கள் தொடர்ச்சியாக முழுநேரம் பணியாற்றியிருக்க வேண்டும்.

மேலும், குறைந்தது ஒரு வருட திறமையான வேலை அனுபவம், அத்துடன் சுகாதார மற்றும் சமூக சேவை தொடர்பான 37 தொழில்களில் ஏதேனும் ஒன்றில் அனுபவம் இருக்க வேண்டும்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!