மரண அறிவித்தல் - அமரர். இளையதம்பி இரத்தினபூபதி
அமரர். இளையதம்பி இரத்தினபூபதி அவர்கள் இன்று செவ்வாய்க்கிழமை (18.11.2025) இறைவனடி இணைந்துள்ளார்.
இவர் புங்குடுதீவு ஏழாம் வட்டாரம் வரதீவை பிறப்பிடமாகவும் ஊரதீவை வசிப்பிடமாகவும் கொண்டவர். எமது குஞ்சியம்மா இறுதிவரை படையினரால் படுகொலைசெய்யப்பட்ட இளையமகள் அமரர். இ. தர்சினியின் நீதியான தீர்ப்புக் கிடைக்கும் வரை காத்திருந்தார்.
அது பகல் கனவாகவே போக இனவழிப்பு மண்ணில் வாழ்வதைவிட இறைவனிடம் சென்றுவிடலாம் என்ற எண்ணத்தில் இறைவனடி சென்றுவிட்டார். இடம்பெயர்ந்த காலத்தில் புங்குடுதீவு வரதீவு வயலூர் முருகன் திருக்கோவிலுக்கு யாருமற்ற வேளையில் திருவிளக்கு வைத்து பராமரித்தார்.
வயலூரான் குடமுழுக்கு காணும் காலப்பகுதியை அண்மித்து வயலூர் முருகன் பாதமடைந்துவிட்டார்.
அன்னாரின் ஈமக்கிரியைகள் நாளை புதன்கிழமை ( 19.11.2025) மதியம் 12.00 மணியளவில் நடைபெறும்.அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல பாணாவிடையானை வேண்டுகின்றோம்.
ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி

(வீடியோ இங்கே )
அனுசரணை
