அனுராதபுரம் - தலாவ பகுதியில் சற்றுமுன் விபத்துக்குள்ளான பேருந்து ; பலர் மருத்துவமனையில்!
#SriLanka
#Accident
Thamilini
3 months ago
அனுராதபுரம், தலாவ, ஜெயகங்கா சந்தி பகுதியில் தனியார் பேருந்து ஒன்று இன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 20 பேர் காயமடைந்து மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காயமடைந்தவர்களை தலாவ மருத்துவமனைக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்தவர்களில் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சமப்வம் குறித்த மேலதிக தகவல்கள் வெளியாகவில்லை. பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
(வீடியோ இங்கே )
அனுசரணை
