சாவகச்சேரி வைத்தியசாலையின் அலங்கோலம்! யார் இதற்கு பொறுப்பு? (வீடியோ இணைப்பு)
உலகளாவிய ரீதியில் அநேகமாக பொது இடங்கள் சுத்தமாக இருக்கும் அதிலும் குறிப்பாக வைத்தியசாலைகள் அதைவிட சுத்தமாக இருக்கும்.
ஆனால் இலங்கையை பொறுத்தவரையில் பொது இடங்கள், மற்றும் வைத்தியசாலைகள் பொதுவாக அசுத்த நிலையிலேயே காணப்படுகின்றது.
அத்துடன் வைத்தியசாலைகளில் உள்ள கழிவறைகள் மிக மோசமான நிலையிலேயே கூடுதலான வைத்தியசாலைகளில் உள்ளது. பொதுவாக வைத்தியசாலைகளில் உள்ள கழிவறைகள் நோயாளிகளின் நன்மைகருதியும் பார்வையாளர்களின் நன்மைகருதியும் மிகவும் சுத்தமாக இருக்க வேண்டும். ஆனால் நிலைமை அவ்வாறு இல்லை.

இலங்கையில் அதுவும் குறிப்பாக வடக்கில் மிக மிக கேவலமாக யாரும் அதை உபயோகிக்க முடியாதவாறு உள்ளதை அவதானிக்க முடிகின்றது. இந்தநிலையில் இது சாவகச்சேரி போதனா வைத்தியசாலையில் உள்ள கழிவறை.

இந்தக் கழிவறை மிக மிக மோசமானதொரு நிலையில் நோயர்களோ யாரும் பாவிக்க முடியாத நிலையில் மிகவும் அசுத்தமான நிலையில் உள்ளது. ஏனைய ஊடகங்களே உங்கள் கவனத்திற்கு! செய்தி என்ற ரீதியில் புனையப்பட்ட பொய்களையும் சமூக சீர்கேடான செய்திகளையும் தன்னல தமிழ் அரசியல்வாதிகளுக்கு கொடி பிடிப்பதையும் விட்டுவிட்டு மக்களுக்கு தேவையான இப்படியான சமூக அக்கறை உள்ள செய்திகளை பிரசுரியுங்கள்.
சாவகச்சேரி வைத்தியசாலையில் இருந்து நேரடியாக பதிவு செய்த காணொளிகள் இவை, சாவகச்சேரி வைத்தியசாலையில் உள்ள கழிவறைகளை ஒருநாளும் துப்பபிரவு செய்வதில்லையா? சாவகச்சேரி வைத்தியசாலைகளை துப்பரவு தொழிலாளி யார்?
வைத்தியசாலை பொறுப்பதிகாரி யார்? கதவுகளுக்கு பூட்டுக்கள் இல்லை. கயிற்றால் கட்டடி வைத்துள்ளார்கள். இதை உரிய பொறுப்பதிகாரிகள் கவனிக்கவில்லையா? அல்லது கண்டும் காணாததும் போல் உள்ளார்களா? ஆளுமை கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களான ரஜீவன், இளங்குமரன் எங்கே? இதற்கு ஒரு தீர்வு இல்லையா?

சாவகச்சேரியில் மட்டுமல்ல பல இடங்களில் வைத்தியசாலைகளில் இந்த நிலையே காணப்படுகிறது. இச்செய்தியை அனைவரும் அனைவருக்கும் பகிரவும்.
மக்களே! வைத்துயசாலை ஊழியர்களே! உங்கள் இடங்களில் இருக்கும் வைத்தியசாலைகள் தொடர்பாக இப்படி செய்திகள் இருப்பின் எமக்கு அனுப்பவும்.
இணைந்து மக்களுக்கும் நோயாளிகளுக்கும் நாட்டுக்கும் உதவுவோம். அனைத்து தேவைகளையும் அரசால் செய்ய முடியாது. நாமும் உதவுவோம். சமூக அக்கறை உள்ளவர்கள் அனைவருக்கும் அனுப்புங்கள்.
-LANKA4 ஊடகம்-
(வீடியோ இங்கே )
அனுசரணை
