இன்றைய ராசிபலன் (03.11.2025) - 12 ராசிகளுக்கும் உள்ளே பலன்கள் உள்ளன
மேஷம்:
அசுவினி: நிதானமாக செயல்பட வேண்டிய நாள். பல வழியிலும் செலவு அதிகரிக்கும். அலைச்சல் ஏற்படும். எதிர்பார்ப்பு தள்ளிப்போகும்.
பரணி: தடைபட்டிருந்த வேலை நடக்கும். வாழ்க்கைத் துணையின் ஒத்துழைப்பால் முயற்சி வெற்றியாகும். ஒரு சிலருக்கு வெளியூர் பயணம் ஏற்படும்.
கார்த்திகை 1: வியாபாரத்தில் போட்டியாளர் கை ஓங்கும். உங்கள் முயற்சி இழுபறியாகும். வரவில் தடை உண்டாகும். செலவிற்கேற்ற பணம் வரும்.
ரிஷபம்:
கார்த்திகை 2,3,4: வரவால் வளம் காணும் நாள். இழுபறியாக இருந்த வேலை நடக்கும். வரவேண்டிய பணம் வரும். வியாபாரம் பெருகும்.
ரோகிணி: வெளி வட்டாரத்தில் செல்வாக்கு உயரும். வியாபாரிகளுக்கு லாபம் அதிகரிக்கும். எடுக்கும் முயற்சி வெற்றியாகும்.
மிருகசீரிடம் 1,2: எதிர்பார்த்த தகவல் வரும். குடும்பத்தினர் தேவையை பூர்த்தி செய்வீர். வெளியூர் பயணம் லாபம் தரும். சேமிப்பு உயரும்.
மிதுனம்:
மிருகசீரிடம் 3,4: வியாபாரத்தில் கவனம் செலுத்த வேண்டிய நாள். பணியாளர் ஒத்துழைப்பு உண்டாகும். தொழிலில் ஏற்பட்ட தடை நீங்கும். உத்தியோகத்தில் நெருக்கடி குறையும்.
திருவாதிரை: திட்டமிட்டு செயல்படுவீர். பழைய கடன் வசூலாகும். ஈடுபடும் முயற்சி வெற்றியாகும். சுப நிகழ்ச்சியில் பங்கேற்பீர்.
புனர்பூசம் 1,2,3: உங்கள் எண்ணம் நிறைவேறும். மேற்கொள்ளும் வேலை லாபம் தரும். வியாபாரத்தை விரிவு செய்ய திட்டமிடுவீர்.
கடகம்:
புனர்பூசம் 4: திருப்புமுனையான நாள். இழுபறியாக இருந்த வேலை நடக்கும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். சங்கடம் விலகும்.
பூசம்: பெரியோர் ஆதரவால் வேலை நடக்கும். புதிய இடம், வாகனம் வாங்குவீர். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
ஆயில்யம்: உங்கள் பிரச்னைக்கு முடிவு காண்பீர். அலுவலகத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். அதிகாரியின் ஆதரவு கிடைக்கும். வருமானம் அதிகரிக்கும்.
சிம்மம்:
மகம்: அமைதி காக்க வேண்டிய நாள். வேலைகளில் எதிர்பாராத பிரச்னை தோன்றும். முக்கிய வேலைகளை ஒத்தி வைப்பது நல்லது.
பூரம்: இயந்திரப் பணியில் இருப்பவர்கள் நிதானமாக செயல்படுவது நல்லது. வெளியூர் பயணத்தில் சங்கடம் உண்டாகும். தெய்வ வழிபாடு நன்மை தரும்.
உத்திரம் 1: சந்திராஷ்டமம் தொடர்வதால் எதிர்பாராத நெருக்கடிக்கு ஆளாவீர். உங்கள் விருப்பத்தில் தடை தோன்றும். எதிர்பார்ப்பு தள்ளிப்போகும். மனம் குழப்பம் அடையும்.
கன்னி:
உத்திரம் 2,3,4: நன்மையான நாள். கூட்டுத்தொழிலில் கவனம் செலுத்துவது நல்லது. நண்பர்கள் உதவியால் வேலை நடக்கும்.
அஸ்தம்: நீங்கள் எடுக்கும் வேலை வெற்றியாகும். குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பம் விலகும். வியாபாரத்தில் வருமானம் அதிகரிக்கும்.
சித்திரை 1,2: திட்டமிட்டு மேற்கொள்ளும் வேலையில் வெற்றி உண்டாகும். இன்று விவேகத்துடன் செயல்பட்டு எடுத்த வேலை முடிப்பீர்.
துலாம்:
சித்திரை 3,4: நினைப்பது நிறைவேறும் நாள். வேலையில் இருந்த பிரச்னை முடிவிற்கு வரும். உடன் பணிபுரிபவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.
சுவாதி: போட்டியாளர்கள் தொல்லை விலகும். நேற்றைய பிரச்னை முடியும். சுறுசுறுப்பாக செயல்பட்டு எதிர்பார்த்த லாபத்தை அடைவீர்.
விசாகம் 1,2,3: அதிர்ஷ்ட வாய்ப்பு தேடிவரும். வருமானம் உயரும். நவீன பொருட்கள் வாங்குவீர். தேவை பூர்த்தியாகும். வழக்கு வெற்றியாகும்.
விருச்சிகம்:
விசாகம் 4: செல்வாக்கு உயரும் நாள்.மேற்கொள்ளும் முயற்சியில் வெற்றியுண்டாகும். யோசிக்காமல் செய்த செயலில் லாபம் ஏற்படும். நிதிநிலை உயரும்.
அனுஷம்: நேற்றுவரை இருந்த நெருக்கடி நீங்கும். நீங்கள் ஈடுபடும் வேலைகளில் கவனமாக இருப்பது நல்லது.
கேட்டை: திட்டமிட்ட வேலைகளில் கவனம் செலுத்துவீர். வியாபாரத்தில் இருந்த தடை விலகும். உறவினரால் நன்மை உண்டாகும். திருமண வயதினருக்கு வரன் வரும்.
தனுசு:
மூலம்: கவனமாக செயல்பட வேண்டிய நாள். அலைச்சல் அதிகரிக்கும் எதிர்பார்ப்பு தள்ளிப்போகும். தாய்வழி ஆதரவு கிடைக்கும்.
பூராடம்: திட்டமிட்ட வேலைகளை நடத்தி முடிப்பீர்கள். வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். எதிர்பார்த்த பணம் கிடைக்கும்.
உத்திராடம் 1: உங்கள் வேலைகள் இழுபறியானாலும் போராடி வெற்றி காண்பீர். புதிய முதலீடுகளை தவிர்ப்பது நல்லது. உறவினர் வீட்டு நிகழ்வில் பங்கேற்பீர்.
மகரம்:
உத்திராடம் 2,3,4: எதிர்ப்பை வெல்லும் நாள். கவனமாக செயல்பட்டு முயற்சியில் லாபம் காண்பீர். வரவு அதிகரிக்கும். நெருக்கடி விலகும். வரன் அமையும்.
திருவோணம்: வழக்குகளில் சாதகமான நிலை உண்டாகும். பணியாளர்களால் நன்மை ஏற்படும். எதிர்பார்த்த பணம் வரும். புதிய இடம், வீடு வாங்கும் முயற்சி வெற்றியாகும்.
அவிட்டம் 1,2: நினைத்ததை சாதிப்பீர். எண்ணத்தை இன்று சிதற விடவேண்டாம். அதனால் நடைபெற வேண்டிய வேலையும் இழுபறியாகும்.
கும்பம்:
அவிட்டம் 3,4: யோசித்து செயல்பட வேண்டிய நாள். உங்களுக்கெதிரான வேலையில் ஒருசிலர் மறைமுகமாக ஈடுபடுவர். செயல்களில் கவனம் செலுத்துவது அவசியம்.
சதயம்: வரவு அதிகரிக்கும். பிறருக்காக உங்களை நீங்கள் மாற்றிக்கொள்வீர். மனம் விரும்பியதை அடையும். உங்கள் முயற்சி லாபமாகும்.
பூரட்டாதி 1,2,3: நீங்கள் ஈடுபடும் ஒவ்வொரு செயலிலும் நிதானமும் கவனமும் அவசியம். குடும்பத்தில் இருந்த நெருக்கடி விலகும். கையில் பணம் புரளும்.
மீனம்:
பூரட்டாதி 4: விருப்பம் நிறைவேறும் நாள். குரு பார்வையால் மனக்குழப்பம் விலகும். திட்டமிட்டு செயல்பட்டு உங்கள் முயற்சியில் வெற்றி அடைவீர்.
உத்திரட்டாதி: குழப்பத்திற்கு இடம் கொடுக்காமல் செயல்படுவதால் எடுத்த வேலைகளை முடிக்க முடியும். கவனமாக செயல்படுவது நல்லது. எதிர்பார்ப்பு பூர்த்தியாகும்.
ரேவதி: அலுவலகத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். உடன் பணிபுரிபவர் ஆதரவு கிடைக்கும். எதிர்பார்த்த வரவு வரும். உங்கள் முயற்சி லாபமாகும்.
(வீடியோ இங்கே )