இன்றைய ராசிபலன் (31.10.2025) - 12 ராசிகளுக்கும் உள்ளே பலன்கள் உள்ளன

#Astrology #Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasu
5 hours ago
இன்றைய ராசிபலன் (31.10.2025) - 12 ராசிகளுக்கும் உள்ளே பலன்கள் உள்ளன

மேஷம்:

அசுவினி: நினைப்பது நடந்தேறும் நாள். தொழில் முன்னேற்றம் அடையும்.

பரணி: பணியிடத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். எதிர்பார்த்த பணம் கிடைக்கும்.

கார்த்திகை 1: இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். சிலர் புதிய இடம் வீடு வாங்குவீர்கள்.

ரிஷபம்:

கார்த்திகை 2,3,4: வியாபாரத்தில் ஆதாயம் காணும் நாள். எடுக்கும் முயற்சி வெற்றியாகும்.

ரோகிணி: பணியிட நெருக்கடி விலகும். வியாபாரிகளுக்கு முதலீட்டிற்கேற்ப ஆதாயம் கிடைக்கும்.

மிருகசீரிடம் 1,2: நினைத்ததை முடிப்பீர்கள். பணியாளர்கள் உங்களுக்கு ஒத்துழைப்பாக இருப்பர்.

மிதுனம்:

மிருகசீரிடம் 3,4: இரண்டு நாளாக இருந்த நெருக்கடி விலகும். மனதில் தெளிவு ஏற்படும்.

திருவாதிரை: பெரிய மனிதர்களின் சந்திப்பு நிகழும். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும்.

புனர்பூசம் 1,2,3: வருமானத்தில் ஏற்பட்ட தடை விலகும். வேலையில் இருந்த நெருக்கடி நீங்கும்.

கடகம்:

புனர்பூசம் 4: விழிப்புடன் செயல்படவும். நீங்கள் நினைப்பது ஒன்றாகவும் நடப்பது வேறாகவும் இருக்கும்.

பூசம்: பணியிடத்தில் எதிர்பாராத நெருக்கடிக்கு ஆளாவீர். உங்கள் எதிர்பார்ப்பு இழுபறியாகும்.

ஆயில்யம்: இயந்திரப் பணியில் இருப்பவர்கள் கவனமுடன் செயல்படுவது நல்லது.

சிம்மம்:

மகம்: மகிழ்ச்சியான நாள். குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். பொன் பொருள் சேரும்.

பூரம்: கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட பிரச்னை முடியும். சுபநிகழ்ச்சியில் பங்கேற்பீர்.

உத்திரம் 1: வியாபாரம் முன்னேற்றம் அடையும். வெளியூர் பயணம் ஆதாயம் தரும்.

கன்னி:

உத்திரம் 2,3,4: எதிர்ப்பு விலகும் நாள். லாப குருவால் உங்கள் எண்ணம் நிறைவேறும்.

அஸ்தம்: திருமண வயதினருக்கு வரன் வரும். அரசுவழி முயற்சி சாதகமாகும்.

சித்திரை 1,2: இழுபறியாக இருந்த வேலை முடியும். மறைமுகமாக தொல்லை கொடுத்தோர் விலகுவர்.

துலாம்:

சித்திரை 3,4: நன்மையான நாள். பூர்வீக சொத்தில் ஏற்பட்ட பிரச்னைகளில் தீர்வு ஏற்படும்.

சுவாதி: குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.

விசாகம் 1,2,3: குழப்பத்திற்கு இடம் கொடுக்காமல் செயல்பட எடுத்த வேலைகள் வெற்றியாகும்.

விருச்சிகம்:

விசாகம் 4: உழைப்பால் உயர்வு காணும் நாள். குருப்பார்வையால் நீங்கள் நினைப்பது நடந்தேறும்.

அனுஷம்: செல்வாக்கு உயரும். பலமுறை முயற்சித்தும் நடக்காமல் இருந்த வேலைகள் இன்று நடக்கும்.

கேட்டை: அவசர வேலைகள் உங்களை நெருக்கடிக்கு ஆளாக்கும் என்றாலும் வருமானம் திருப்தி தரும்.

தனுசு:

மூலம்: முயற்சியால் வெற்றியடையும் நாள். பணியிடத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும்.

பூராடம்: வரவேண்டிய பணம் வரும். அரசு வழி வேலை முடியும். செல்வாக்கு உயரும்.

உத்திராடம் 1: மேல் அதிகாரியின் ஆதரவு கிடைக்கும். சகோதரர் உங்களுக்கு உதவியாக இருப்பார்.

மகரம்:

உத்திராடம் 2,3,4: பணப்புழக்கம் அதிகரிக்கும் நாள். குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும்.

திருவோணம்: இரண்டு நாளாக இருந்த குழப்பம் விலகும். திருமண வயதினருக்கு வரன் வரும்.

அவிட்டம் 1,2: வியாபாரத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். கையில் பணம் புரளும்.

கும்பம்:

அவிட்டம் 3,4: குழப்பத்திற்கு ஆளாகும் நாள். கையில் எடுத்த வேலைகள் இழுபறியாகும்.

சதயம்: எதிர்பார்த்த பணம் வரும். பெரிய மனிதர்களின் ஆதரவால் மனதில் தைரியம் உண்டாகும்.

பூரட்டாதி 1,2,3: நீண்டநாள் கனவு நனவாகும். வெளியூர் பயணம் ஆதாயம் தரும்.

மீனம்:

பூரட்டாதி 4: வரவு செலவில் கவனமாக இருக்க வேண்டிய நாள். உங்கள் எதிர்பார்ப்பு இழுபறியாகும்.

உத்திரட்டாதி: பணியாளர்களுக்கு வேலைப்பளு உண்டாகும். சிலருக்கு மருத்துவச் செலவு ஏற்படும்.

ரேவதி: வெளியூர் பயணத்தில் எச்சரிக்கை அவசியம். புதிய முதலீடுகள் இன்று வேண்டாம்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )


உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!