இந்த வாரம் யாருக்கு என்ன நடக்கும்? 12 ராசிகளுக்கும் பலன்கள் உள்ளே (வீடியோ இணைப்பு)

#Astrology #Rasipalan #Weekly-Rasipalan #Lanka4
Prasu
3 hours ago
இந்த வாரம் யாருக்கு என்ன நடக்கும்? 12 ராசிகளுக்கும் பலன்கள் உள்ளே (வீடியோ இணைப்பு)

மேஷம்:

அதிகாலையில் சூரியனை வழிபட நன்மை உண்டாகும்.

அசுவினி: கேது பகவான் சங்கடத்தையும் வேலையில் நெருக்கடியையும் ஏற்படுத்துவார். லாப ராகுவால் வரவேண்டிய பணம் வரும். குரு பார்வைகளால் தடைபட்ட வேலை நடக்கும் வெள்ளிக்கிழமை விழிப்புணர்வு தேவை.

பரணி: சுக்கிரன் உடலில் நோய், மனதில் கவலை, குழப்பம் என ஏற்படுத்துவார். திங்கள் முதல் குரு பார்வை படுவதால் எடுத்த வேலை வெற்றியாகும். ஆரோக்யம் சீராகும். சனிக்கிழமை கவனமாக செயல்படுவது நல்லது.

கார்த்திகை 1ம் பாதம்: சூரியனால் வேலையில் இருப்பவர்களுக்கு எதிர்பாராத இடமாற்றம் ஏற்படும். ஒரு சிலர் வசிக்கும் வீட்டில் இருந்து வேறு இடத்திற்கு மாறுவீர். குருவின் பார்வையால் அதிர்ஷ்ட வாய்ப்பு தேடிவரும். திட்டமிட்டு செயல்படுவது நல்லது.

ரிஷபம்:

லட்சுமி நரசிம்மரை வழிபட சங்கடம் விலகும்.

கார்த்திகை 2,3,4: சூரியன் செல்வாக்கை உயர்த்துவார். வேலையில் இருப்பவர்களுக்கு இடமாற்றம் உண்டாகும். அரசியல்வாதிகள் கனவு நனவாகும். அரசு வழி முயற்சி சாதகமாகும். உடல்நிலை சீராகும். ஞாயிறு அன்று புதிய முயற்சி வேண்டாம்

ரோகிணி: குருவின் பார்வையால் குழப்பம் விலகும். திருமண வயதினருக்கு வரன் வரும். புதிய இடம் வீடு வாங்கும் முயற்சி வெற்றியாகும். தொழில் முன்னேற்றம் அடையும். வரவு அதிகரிக்கும். வேலையில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். திங்கள் கிழமை திட்டமிட்டு செயல்படுவது நல்லது.

மிருகசீரிடம் 1,2: ஆறாமிட செவ்வாயால் சமுகத்தில் நிலை உயரும். தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். துணிச்சலாக செயல்பட்டு நினைத்ததை சாதிக்க வைப்பார். செவ்வாய்கிழமை சிந்தித்து செயல்படுவது அவசியம்.

மிதுனம்:

பார்த்தசாரதியை வழிபட வாழ்க்கை வளமாகும்.

மிருகசீரிடம் 3,4: சத்ரு ஸ்தானத்தில் செவ்வாய் சஞ்சரிப்பதால் நினைத்த வேலை நடக்கும். எடுக்கும் முயற்சி வெற்றியாகும். வரவு அதிகரிக்கும். உடல்நிலை சீராகும். வழக்கு விவகாரம் சாதகமாகும். செவ்வாய் புதனில் புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது.

திருவாதிரை: ராகுவும் கேதுவும் உங்கள் செல்வாக்கை உயரும். வியாபாரம் தொழில் முன்னேற்றம் அடையும். இழுபறியாக இருந்த வேலை முடிவிற்கு வரும். வருமானம் அதிகரிக்கும். புதன் வியாழனில் யோசித்து செயல்படுவது நல்லது.

புனர்பூசம் 1,2,3: குரு பகவானால் குடும்பத்தில் நிம்மதி இருக்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும். வேலைத் தேடியவருக்கு எதிர்பார்த்த தகவல் வரும். புதிய சொத்து சேரும். பொன் பொருள் சேரும். வியாழக்கிழமை விழிப்புடன் செயல்படுவது நல்லது.

கடகம்:

நவக்கிரகத்தில் உள்ள குருவை வழிபட சங்கடம் விலகும்.

புனர்பூசம் 4: குருவால் அலைச்சல் அதிகரிக்கும். அவர் பார்வை எதிர்பார்ப்பை பூர்த்தியாகும். சிலருக்கு குழந்தை பாக்யம் உண்டாகும். புதிய சொத்து சேரும். திருமண வயதினருக்கு வரன் வரும்.

பூசம்: அஷ்டமத்தில் சஞ்சரிக்கும் ராகு உங்களுக்கு நெருக்கடியை உண்டாக்குவார். உடல்நிலையில் எதிர்பாராத சங்கடம் தோன்றும். வருமானம் இழுபறியாகும். வாகனத்தால் செலவு ஏற்படும்.

ஆயில்யம்: திங்கள் வரை புத பகவான் திட்டமிட்டு செயல்பட வைப்பார். வேலைகளை வெற்றியாக்குவார். எந்தச்செயலிலும் நிதானம் தேவை. தொழிலில் பிறரை நம்பி செயல்படாமல் நேரிடையாக செய்வது நல்லது.

சிம்மம்:

விநாயகரை வழிபட சங்கடம் விலகும்.

மகம்: கேது பகவானால் செயல்களில் தடுமாற்றம், கவனக்குறைவை ஏற்படுத்துவார். ராகு நண்பர்களால் லாபம் காண வைப்பார். வீட்டிற்கு தேவையான பொருட்கள், புதிய வாகனம் என வாங்க வைப்பார்.

பூரம்: தன குடும்ப ஸ்தானத்தில் சுக்கிரன் சஞ்சரிப்பதால் வியாபாரம் லாபம் தரும். மன நிம்மதி உண்டாகும். குடும்பத்தில் இருந்த குழப்பம் விலகும். பொன் பொருள் சேரும். மூன்றாமிட செவ்வாயால் எடுக்கும் முயற்சி வெற்றியாகும்.

உத்திரம் 1: சகாய ஸ்தான சூரியன் நெருக்கடியை நீக்குவார். எடுக்கும் முயற்சிகளை வெற்றியாக்குவார். தைரியமாக செயல்பட வைப்பார். செல்வாக்கை உயர்த்துவார். அரசுவழி வேலைகளில் நன்மை அதிகரிக்கும்.

கன்னி:

ஆதி திருவரங்கனை வழிபட வாழ்வில் வளம் உண்டாகும்.

உத்திரம் 2,3,4: புத ஆதித்ய யோகத்துடன் வாரம் பிறப்பதால் தடைபட்ட வேலை நடக்கும். பணியாளர்களுக்கு ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். செய்து வரும் தொழில் முன்னேற்றம் அடையும். கலைஞர்களுக்கு ஒப்பந்தம் கிடைக்கும். வருமானம் திருப்தி தரும்.

அஸ்தம்: சத்ரு ஸ்தானத்தில் ராகு சஞ்சரிப்பதால் நினைப்பது நடக்கும். எடுக்கும் முயற்சி வெற்றியாகும். போட்டியாளரால் ஏற்பட்ட நெருக்கடி விலகும். ஷேர் மார்க்கெட் லாபம் தரும். பொருளாதார நிலை உயரும்.

சித்திரை 1,2: திங்கள் முதல் குரு பார்வையுடன் செவ்வாய் சஞ்சரிப்பதால் வியாபாரத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். எடுக்கும் வேலை வெற்றியாகும். ஒரு சிலருக்கு புதிய சொத்து சேரும். உடல்நிலை சீராகும். எதிர்பார்த்த பணம் வரும்.

துலாம்:

சங்கர நாராயணரை வழிபட வாழ்வில் முன்னேற்றம் உண்டாகும்.

சித்திரை 3,4: ராசிக்குள் செவ்வாய், சூரியன், புதன் இருப்பதால் எடுக்கும் வேலைகளில் பதட்டம் ஏற்படும். சில வேலை சங்கடத்தை உண்டாகும். இருப்பினும் தேவைக்கேற்ற பணம் வரும். குடும்பத்தில் நிம்மதி இருக்கும்.

சுவாதி: ராகு பூர்வீக சொத்துகளிலும், பிள்ளை வழியாகவும் நெருக்கடிகளை ஏற்படுத்துவார். பிரச்னைகளுக்கு ஆளாக்குவார். ஒரு சிலருக்கு எதிர்பாலினரால் சங்கடம் தோன்றும். மனம் குழப்பம் அடையும்.

விசாகம் 1,2,3: பத்தாமிட குரு பண வரவை உண்டாக்குவார். குடும்பத்தில் நிம்மதி ஏற்படும். வியாபாரத்தை முன்னேற்றம் ஏற்படும். எதிர்ப்பு, பகை, நோய் நொடி, வழக்கு என்ற நிலை மாறும். பொன் பொருள் சேர்க்கை உண்டாக்கும்.

விருச்சிகம்:

திருச்செந்துார் முருகனை வழிபட சங்கடம் நீங்கும்.

விசாகம் 4: குருவின் பார்வை உங்கள் நிலையை உயர்த்தும். வேலைக்காக மேற்கொண்ட முயற்சி வெற்றியாகும். வியாபாரம் தொழில் முன்னேற்றம் அடையும். எதிர்பார்த்த பணம் வரும். பூர்வீக சொத்தில் ஏற்பட்ட பிரச்னை முடியும்.

அனுஷம்: சுக ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ராகுவால் உழைப்பு அதிகரிக்கும். எதிலும் போராடி முடிக்க வேண்டியதாக இருக்கும். ராசிக்கு குரு பார்வை கிடைப்பதால் செல்வாக்கும் அந்தஸ்தும் உயரும்.

கேட்டை: விரய ஸ்தானத்தில் புதன், சூரியன் செவ்வாய் சஞ்சரிப்பதால் எதிர்பாராத செலவுகளும் அலைச்சலும் ஏற்படும். திங்கள் முதல் குரு மங்கள யோகம் உண்டாவதால் கனவு நனவாகும். பொருளாதார நிலை உயரும்.

தனுசு:

வராகியை வழிபட வாழ்வில் வளம் உண்டாகும்.

மூலம்: கேது பகவானால் பெரிய மனிதர்கள் தொடர்பு உண்டாகும். அவர்களுடைய ஆதரவால் உங்கள் வேலை நடக்கும். மூன்றாமிட ராகு முயற்சிகளை வெற்றியாக்குவார். முன்னேற்றத்தை உண்டாக்குவார்.

பூராடம்: சுக்கிரன் பத்தாமிடத்தில் சஞ்சரித்து நெருக்கடியை உண்டாக்குவார். சூரியனால் தொட்டதெல்லாம் பொன்னாகும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த மாற்றம் உண்டாகும். பண வரவு அதிகரிக்கும். அரசுவழி வேலை சாதகமாகும்.

உத்திராடம் 1: புத ஆதித்ய யோகம் உண்டாவதால் வேலையில் இருந்த நெருக்கடி நீங்கும். எதிர்பார்த்த இடமாற்றம் பதவி உயர்வு கிடைக்கும். தொழில் வியாபாரம் லாபம் தரும். வருமானமும் செல்வாக்கும் உயரும்.

மகரம்:

குருவை வழிபட சங்கடம் விலகும்.

உத்திராடம் 2,3,4: ஜீவன ஸ்தானத்தில் சூரியன் புதன் சஞ்சரிப்பதால் தொழில் முன்னேற்றம் அடையும். பணியாளர்களுக்கு ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். புதிய தொழில் தொடங்க எதிர்பார்த்த அனுமதி கிடைக்கும். எதிர்பார்த்த பணம் வரும்.

திருவோணம்: குருவின் பார்வை ராசிக்கு உண்டாவதால் செல்வாக்கு உயரும். தடைபட்ட வேலை நடக்கும். தொழில் லாபம் தரும். எடுக்கும் வேலை வெற்றியாகும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும்.

அவிட்டம் 1,2: லாப ஸ்தானத்தில் திங்கள் கிழமை முதல் குரு பார்வையுடன் செவ்வாய் சஞ்சரிப்பதால் வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். விற்பனை அதிகரிக்கும். வேலையில் இருப்பவர்கள் செல்வாக்கு உயரும். மேல் அதிகாரியின் ஆதரவு கிடைக்கும்.

கும்பம்:

பிரத்தியங்கிராவை வழிபட சங்கடம் விலகும்.

அவிட்டம் 3,4: செவ்வாய் பகவான் திங்கள் கிழமை முதல் ஜீவன ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் வரவு செலவில் கவனம் தேவை. வியாபாரத்தில் புதிய முதலீடு செய்வதற்கு முன் சூழ்நிலைகளை அறிந்து செயல்படுவது நல்லது.

சதயம்: ராசிக்குள் ராகு, சப்தம ஸ்தானத்தில் கேது சஞ்சரிப்பதால் ஒவ்வொரு வேலையிலும் கவனம் தேவை. தவறான நபர்களை விட்டு விலகுங்கள். சட்டத்திற்கு புறம்பான வேலைகளில் ஈடுபடாதீர்கள்.

பூரட்டாதி 1,2,3: குருவின் பார்வை எதிர்பார்ப்புகளை பூர்த்தியாக்கும். தொழிலில் முன்னேற்றத்தை உண்டாக்கும். பணப்புழக்கத்தை அதிகரிக்கும். குடும்பத்தில் நிம்மதி ஏற்படும்.

மீனம்:

கோமதி அம்மனை வழிபட எடுக்கும் முயற்சி வெற்றியாகும்.

பூரட்டாதி 4: குருவின் பார்வையால் இருட்டில் இருந்து வெளிச்சத்திற்கு வந்தது போல் உங்கள் நிலைமாறும். புதிய வாய்ப்பு தேடிவரும். செய்துவரும் தொழில் முன்னேற்றம் அடையும். வேலையில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும்.

உத்திரட்டாதி: இதுவரை இருந்த பிரச்னை இருந்த இடம் தெரியாமல் போகும். எதிர்ப்பு விலகும். தொழில் முன்னேற்றம் அடையும். விரய ராகுவும் சப்தம சுக்கிரனும் தடுமாற்றத்தை ஏற்படுத்துவார். எதிர்பாலினரிடம் தள்ளி இருப்பது நல்லது.

ரேவதி: எட்டாமிட புதன், ஆறாமிட கேது, ஐந்தாமிட குரு புதிய வீடு வாங்கும் முயற்சியை வலுப்படுத்துவார். எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்கும். வரவு அதிகரிக்கும். லாபநஷ்டம் என்ற நிலை மாறும்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )


உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!