இந்த வாரம் யாருக்கு என்ன நடக்கும்? 12 ராசிகளுக்கும் பலன்கள் உள்ளே (வீடியோ இணைப்பு)

மேஷம்
உள்ளத்தில் மேன்மையும், உறுதியும் கொண்டு நேர்மையாக நடக்கும் மேஷம் ராசியினருக்கு இந்த வாரம் புதிய நண்பர்கள் மற்றும் தொடர்புகளால் பல நன்மைகள் ஏற்படும். குடும்பத்தில் சுப செலவுகள் ஏற்படும்.
தொழில்துறையினர், வியாபாரிகள் இரவு-பகல் பாராமல் உழைத்ததற்கான நன்மைகளை பெறக்கூடிய காலகட்டம் இது. உத்தியோகஸ்தர்கள் உயர் அதிகாரிகள் ஆதரவால் பதவி உயர்வு பெறுவார்கள்.ரியல் எஸ்டேட்டில் புதிய இடங்களில் கட்டுமானப்பணிகள் நடக்கும்.
ஷேர் மார்க்கெட்டில் வேளாண் நிறுவன பங்குகளில் லாபம் உண்டு. மாணவர்கள் விளையாட்டிலும், கல்வியிலும் புதிய சாதனை செய்வர்.அலைச்சல், மனஉளைச்சல், தலைவலி, முதுகுவலி ஏற்பட்டு மருத்துவத்தால் குணமாகும்.
மனைவி வழி சொந்தங்களுக்கு உதவி செய்வது, மனைவி வழி முதிய உறவினர்களிடம் ஆசி பெறுவதும் நன்மை ஏற்படுத்தும்.
ரிஷபம்
தைரியமாக பேசினாலும் மனதில் அதே அளவு கூச்சமும் உள்ள ரிஷபம் ராசியினருக்கு இந்த வாரம் புதிய ஆடை ஆபரண சேர்க்கை உண்டு. நண்பர்களோடு அல்லது குடும்பத்தோடு சுற்றுலா செல்வீர்கள்.
தொழில் துறையினர், வியாபாரிகள் தொழில் வளர்ச்சிக்கான விஷயங்களை நேரம் பார்த்து நிறைவேற்றலாம். உத்தியோகஸ்தர்கள் பதவி உயர்வு அல்லது வேறு இடத்தில் பணி வாய்ப்பு கிடைக்கப் பெறுவர்.ரியல் எஸ்டேட்டில் பழைய கடன்கள் தீரும்.
ஷேர் மார்க்கெட்டில் ஹோட்டல் தொழில் நிறுவன பங்கில் லாபம் உண்டு. மாணவர்கள் கணினி, பொறியியல் தொழில்நுட்ப பயிற்சிகள் பெறுவர்.தலை கிறுகிறுப்பு, மயக்கம் வருவதுபோல இருந்தால் தக்க மருத்துவ சிகிச்சை, ரத்த பரிசோதனை தேவை.
தினமும் ஓரிருவருக்காவது அன்னதானம் அல்லது பொருள் தானம் தருவது நன்மை ஏற்படுத்தும்.
மிதுனம்
வேடிக்கையான பேச்சும், சுபாவமும், துன்பங்களை ஏற்றுக் கொள்ளும் மனப் பக்குவமும் உடைய மிதுனம் ராசியினருக்கு திடீர் அதிர்ஷ்டம் ஏற்படக்கூடிய காலகட்டம் இது. செல்வாக்கும் சொல்வாக்கும் உயரும்.தொழில்துறையினர், வியாபாரிகள் எதிர்பார்த்த வளர்ச்சியும், லாபமும் அடைவர்.
உத்தியோகஸ்தர்கள் பொறுமையாக செயல்பட்டு நிர்வாகத்திடம் நல்ல பெயர் பெறுவார்கள்.ரியல் எஸ்டேட்டில் அடுக்குமாடி குடியிருப்புகளிலும், ஷேர் மார்க்கெட்டில் அரசு நிறுவன பங்குகளிலும் ஆதாயம் உண்டு.
மாணவர்கள் தொழில் நுட்ப, போட்டித் தேர்வுகளில் பங்குபெற்று வெற்றி பெறுவர்.சிறிய விஷயங்களுக்கு கூட மன அமைதி இழக்கும் சூழல் உருவாகும். அதனால் மன அமைதி முக்கியம். முடிந்தவரை இந்த வாரம் மவுனமாக இருப்பதும், நாக தேவதைக்கு பால் அபிஷேகம் செய்வதும் நன்மை தரும்.
கடகம்
தனக்கு பிடித்தவர்களுடன் அன்போடும், தாராள மனதுடனும் நடந்துகொள்ளும் கடகம் ராசியினருக்கு இந்த வாரம் விலகிய உறவுகள் தேடி வரும். புதிய பொறுப்புகளால் மனதில் தெம்பு உருவாகும்.தொழில்துறையினரும், வியாபாரிகளும் இந்த வாரம் தொழில் விருத்திக்குரிய விஷயங்களை செயல்படுத்துவர்.
உத்தியோகஸ்தர்களுக்கு புதிய பொறுப்புகள் ஏற்பட்டு, வேலைப் பளு கூடும்.ரியல் எஸ்டேட்டில் நாடிய நன்மைகள் வீடு வந்து சேரும். ஷேர் மார்க்கெட்டில் எரிவாயு நிறுவன பங்குகளில் ஆதாயம் உண்டு. மாணவர்கள் நண்பர்கள் வீட்டு விசேஷங்களில் பங்கேற்று அவர்களுக்கு துணையிருப்பர்.
மன உளைச்சல், உடல் சோர்வு ஏற்பட்டு ஓய்வு, மருத்துவ சிகிச்சை மூலம் விலகும். வயதான பெண்கள், அரவானிகளுக்கு அன்னதானமோ, ஆடை தானமோ செய்வது நன்மைகளை தரும்.
சிம்மம்
பிடிவாத குணமும், இயற்கையை நேசிக்கும் தன்மையும் கொண்ட சிம்ம ராசியினர் இவ்வாரம் எதிர்கால நன்மைக்கு உரிய விஷயங்களை செய்து கொள்வர். ஒருசிலருக்கு புதிய வீடு வாங்கும் யோகம் ஏற்படும்.
தொழில்துறையினர், வியாபாரிகள் இவ்வாரம் முன்னேற்றப் பாதையில் புன்னகையுடன் நடப்பார்கள். உத்தியோகஸ்தர்கள் பழைய சிக்கல்கள் அகன்று புதிய தெம்போடு பணிகளில் ஈடுபடுவார்கள்.ரியல் எஸ்டேட் தொழில் வளர்ச்சியடையும் காலமிது.
ஷேர் மார்க்கெட்டில் தனியார் பெட்ரோலிய நிறுவன பங்குகளில் லாபம் உண்டு. மாணவர்கள் படிக்கும் இடங்களில் தேவையற்ற பேச்சுகளை தவிர்ப்பது அவசியம்.இருமல், காய்ச்சல், தொண்டை வலி ஏற்பட்டு சிகிச்சைக்கு பிறகு அகலும்.
இரவு அதிகம் கண் விழிப்பதை தவிர்க்கவும். கோவில் வாசலில் அமர்ந்துள்ள வறியவர்களுக்கு அன்னதானம் அளிப்பது நன்மை பல தரும்.
கன்னி
சமூக விஷயங்களில் புத்திசாலித்தனமாகவும், நண்பர்கள் விஷயத்தில் விசுவாசமாகவும் நடந்து கொள்ளும் கன்னி ராசியினருக்கு இந்த வாரம் எதிர்பார்த்த பண வரவு உண்டு. வாழ்க்கைத் துணையால் ஆதாயம் பெறுவர்.
தொழில்துறையினர், வியாபாரிகள் புதிய கூட்டாளிகள், வர்த்தக வளர்ச்சிக்கான தொடர்புகள் கிடைத்து மகிழ்வர். உத்தியோகஸ்தர்கள் பணியிடத்தில் சக ஊழியர்களிடம் சொந்த கதைகளை பேசுவது கூடாது.ரியல் எஸ்டேட்டில் புதிய திட்டங்களுக்கு அச்சாரம் போடப்படும்.
ரியல் எஸ்டேட்டில் வெளிநாட்டுப் பங்குகளில் ஆதாயம் கிடைக்கும். மாணவர்கள் இரவு அதிக நேரம் கண் விழித்து படிப்பதை தவிர்க்க வேண்டும்.காலம் தவறி வெளியிடங்களில் உணவு உண்பதால் வயிற்றில் கோளாறு, வலி, தொண்டையில் வலி ஏற்பட்டு சிகிச்சையால் அகலும்.
துலாம்
வேடிக்கையான பேச்சும், நேர்மறை சிந்தனையும் கொண்ட துலாம் ராசியினருக்கு இந்த வாரம் எதிர்பாராத அதிர்ஷ்டம் உண்டு. திருமணம் ஆகாதவர்களுக்கு நல்ல செய்திகள் வீடு வந்து சேரும்.தொழில்துறையினர், வியாபாரிகள் தொழில் விரிவாக்க பணிகளை தைரியமாக செய்யலாம்.
உத்தியோகஸ்தர்களுக்கு வேறு நிறுவனத்தில் பணி கிடைத்தால் தயங்காமல் அதில் சேர்ந்துகொள்ளலாம்.ஷேர் மார்க்கெட்டில் எண்ணெய், பெட்ரோல் நிறுவன பங்குகளில் லாபமுண்டு. ரியல் எஸ்டேட்டில் துணிச்சலாக புதிய முதலீடுகளை செய்யலாம்.
அரசின் நலத்திட்டங்கள் மாணவர்களுக்கு கிடைக்கும்.பல இடங்களுக்கும் பயணம் செய்வதால் உடலில் அசதி ஏற்பட்டு விலகும். வெளியிடங்களில் தண்ணீர் பருகும்போது கவனம் தேவை. அரவாணிகளுக்கு உணவும், பணமும் அளித்து ஆசி பெற நன்மை உண்டு.
விருச்சிகம்
தீர்க்கமாக சிந்திக்கும் திறனும், மற்றவர்களுடைய ரகசியங்களை கட்டிக்காக்கும் மனமும் கொண்ட விருச்சிக ராசியினருக்கு எதிர்காலம் குறித்த நம்பிக்கை ஏற்படும். குடும்ப பொருளாதாரம் மேம்படும்.
தொழில்துறையினர், வியாபாரிகள் கடந்த கால பிரச்சினைகளிலிருந்து விடுபடுவர். உத்தியோகஸ்தர்கள் பணி சார்பான புதிய தொழில்நுட்பdddங்களை தெரிந்து கொள்வார்கள். சிலர் புரமோஷன் பெறுவர்.ரியல் எஸ்டேட்டில் புதிய வாடிக்கையாளர்களால் லாபம் உண்டு.
ஷேர் மார்க்கெட்டில் நிதிநிறுவன நிறுவன பங்குகளில் ஆதாயம் ஏற்படும். மாணவர்கள் திருமண நிகழ்வுகளில் பரபரப்பாக செயல்படுவர்.ஜலதோஷம், காய்ச்சல், உடல் அசதி ஏற்பட்டு ஓய்வாலும், சிகிச்சையாலும் விலகும். பழமையான சிவன் அல்லது பெருமாள் கோவில்களில் 3 நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் நன்மைகள் நாடி வரும்.
தனுசு
வெளிப்படையான மனமும், மற்றவர்கள்மீது உண்மையான அக்கறையும் கொண்ட தனுசு ராசியினர் இந்த வாரம் வீடுகளுக்கு தேவையான பொருட்களை வாங்குவர். குடும்ப உறவுகளில் மகிழ்ச்சி நிலவும்.
தொழில்துறையினர், வியாபாரிகள் புதிய மாற்றங்களை துணிச்சலாக செய்யலாம். உத்தியோகஸ்தர்கள் உயர் அதிகாரிகளின் தொடர்பால் எதிர்கால முன்னேற்றத்துக்கான உத்திரவாதம் பெறுவார்கள். ரியல் எஸ்டேட்டில் நல்ல காலம் தொடங்கி விட்டது.
ஷேர் மார்க்கெட்டில் அரசு சார்ந்த நிறுவன பங்குகளில் லாபமுண்டு. மாணவர்கள் செஸ், கேரம், ஷட்டில் போன்ற உள்ளரங்க விளையாட்டுகளில் வெற்றி பெறுவர். எந்த விஷயத்தையும் நிதானமாக அணுகுவதாலும், நன்றாக உறங்குவதாலும் உடல்நல கோளாறுகளை நிச்சயம் தவிர்க்க முடியும்.
மகரம்
எந்த வேலையையும் தங்கள் பாணியில் திறமையாக செய்து காரிய வெற்றி பெறும் மகரம் ராசியினருக்கு இவ்வாரம் புதிய நண்பர்கள் மூலம் நல்ல செய்திகள் வீடு வந்து சேரும். பொருளாதார வரவால் மன நிம்மதி கூடும்.
தடை தாமதங்களை சந்தித்து வந்த தொழில் துறையினர் மற்றும் வியாபாரிகள் இனிமேல் உற்சாகம் அடைவர். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த பணி உயர்வு, ஊதிய உயர்வு பெற்று மகிழ்வர்.
ரியல் எஸ்டேட்டிலும், ஷேர் மார்க்கெட்டிலும் புதிய தொடர்புகளால் பிரகாசமான வாய்ப்புகள் கிடைக்கும். மாணவர்கள் சுற்றுலா செல்லும் இடங்களிலும் கல்வி சம்பந்தமான விஷயங்களை அறிந்து கொள்வர்.
பல் வலி, தொண்டை வலி, ஜலதோஷம் காய்ச்சல், தலைவலி ஏற்பட்டு சிகிச்சையால் குணமாகும். பொருளாதார வசதி குறைந்த மாணவ, மாணவியர்களுக்கு பண உதவி செய்தால் நன்மைகள் பல நாடி வரும்.
கும்பம்
நட்புக்கு புதிய இலக்கணம் ஏற்படுத்தும் கும்ப ராசினர் இந்த வாரம் சமூக மதிப்பு பெற்ற மனிதர்களாக உலா வருவார்கள். குடும்பத்தில் பணம் வரவு அதிகரிப்பதால் பழைய கடன்கள் அடைபடும்.
தொழில் துறையினர், வியாபாரிகள் எதிர்பாரா செலவினங்களை சந்தித்து சமாளிப்பார்கள். உத்தியோகஸ்தர்கள் மற்றவர்களை நம்பாமல் அலுவலகப் பணிகளில் தாங்களே கவனமாக செயல்பட வேண்டும். ரியல் எஸ்டேட்டிலும், ஷேர் மார்க்கெட்டிலும் புது தொழில் முதலீடுகளை செய்ய நல்ல நேரம் இது.
மாணவர்கள் விளையாட்டுகளில் கவனம் செலுத்தும் அளவிற்கு பாடங்களிலும் அக்கறை காட்ட வேண்டும்.ஒற்றை தலைவலி, கண் வலி, முதுகுவலி ஏற்பட்டு மருத்துவ சிகிச்சையால் விலகும். பிள்ளையார் கோவிலில் வைத்து சிறுவர்-சிறுமிகளுக்கு விளையாட்டு பொருள், இனிப்பு பரிசாக வழங்க நன்மை வந்து சேரும்.
மீனம்
தனிமையை நாடி சிந்தித்துக் கொண்டிருந்தாலும், அனைவரோடும் இனிமையாகப் பேசும் இயல்பும் கொண்ட மீனம் ராசியினருக்கு இந்த வாரம் தெய்வ அனுக்கிரகத்தால் தடைப்பட்ட பல காரியங்கள் நடந்தேறும். தொழில் துறையினர், வியாபாரிகள் கடன் பெற்று செய்யும் தொழில் விரிவாக்க முயற்சியில் கவனமாக இருக்க வேண்டும்.
உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்தில் பிறரிடம் அதிகமாக பேசுவதை தவிர்க்க வேண்டும்.ரியல் எஸ்டேட்டில் நடக்கும் பணிகளை நேரில் சென்று பார்க்கவும். ஷேர் மார்க்கெட்டில் புதிய நிறுவன பங்குகளில் ஆதாயம் ஏற்படும்.
மாணவர்களுக்கு புதிய நண்பர்கள் பல விதங்களிலும் உதவுவர்.வெளியிடங்களில் சுகாதாரமான சூழலில் உணவு, தண்ணீர் உள்ளிட்ட பானங்களை பருகுவது அவசியம்.
(வீடியோ இங்கே )



