அமெரிக்காவில் பார்வையாளர்கள் மத்தியில் பயிற்சியாளரை தாக்கிக் கொன்ற புலி!

அமெரிக்காவின் ஓக்லஹோமாவில் உள்ள ஒரு விலங்கு பாதுகாப்பு பூங்காவில் ஒரு நிகழ்ச்சியின் போது, புலி ஒன்று தனது பயிற்சியாளரைத் தாக்கி கொன்ற துயரச் சம்பவம் பதிவாகியுள்ளது.
புலியால் தாக்கப்பட்ட 37 வயதான ரியான் ஈஸ்லி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். டெக்சாஸ் எல்லைக்கு அருகிலுள்ள தென்கிழக்கு ஓக்லஹோமாவின் ஹ்யூகோவில் உள்ள க்ரோலர் பைன்ஸ் புலி சரணாலயத்தில் சனிக்கிழமை பிற்பகல் 2 மணியளவில் இந்த கொடூரமான சம்பவம் நிகழ்ந்தது.
ஈஸ்லியும் புலியும் பார்வையாளர்களுக்காக நிகழ்ச்சி நடத்திக் கொண்டிருந்தபோது இந்த தாக்குதல் நிகழ்ந்தது.
அவரைக் கடித்த புலியை, ஈஸ்லி சிறு வயதிலிருந்தே வளர்த்து வந்துள்ளார். மேலும் ஈஸ்லியின் மனைவி மற்றும் இளம் மகள், பல பார்வையாளர்கள் உட்பட, சம்பவ இடத்தில் பார்த்துக் கொண்டிருந்தபோது, புலி ஈஸ்லியின் கழுத்து மற்றும் தோள்பட்டையைக் கடித்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
விபத்துக்குப் பிறகு ஈஸ்லியின் மனைவி ஓடிவந்து புலியை வேறொரு கூண்டிற்கு மாற்றியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
(வீடியோ இங்கே )
அனுசரணை



