அமெரிக்காவில் 49 வயது இந்திய வம்சாவளி பெண் சுட்டுக்கொலை
#Arrest
#Murder
#Women
#America
#GunShoot
#Indian
Prasu
2 hours ago

அமெரிக்காவின் தென் கரோலினா பகுதியில், 49 வயது இந்திய வம்சாவளி பெண்ணான கிரண் பட்டேல் என்பவர் பெட்ரோல் நிறுவனம் ஒன்றை நிர்வகித்து வந்தார்.
இவர் குஜராத்தை பூர்வீகமாக கொண்டவர். இந்த நிலையில் கடந்த 16ம் திகதி பெட்ரோல் நிறுவனத்திற்கு கொள்ளையடிக்கும் நோக்கில் வாலிபர் ஒருவர் துப்பாக்கியுடன் நுழைந்தார்.
அந்த வாலிபர் மீது ஒரு பாட்டிலை எறிந்து விட்டு கிரண் படேல் தப்பி ஓடினார். அப்போது வாலிபர் துப்பாக்கியால் சுட்டதில் கிரண் பட்டேல் உயிரிழந்தார்.
இதில் இந்திய பெண்ணை சுட்டு கொன்றது 21 வயது ஜேடன் மேக் ஹில் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.
(வீடியோ இங்கே )



