உடையார்கட்டில் சிறுமி பாலியல் துஸ்பிரயோகம். இரு இளைஞர்கள் கைது

#SriLanka #Mullaitivu #ADDA #shelvazug #ADDAADS #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Soruban
1 month ago
உடையார்கட்டில் சிறுமி பாலியல் துஸ்பிரயோகம். இரு இளைஞர்கள் கைது

முல்லைத்தீவு - உடையார்கட்டு தெற்கு குரவில் பகுதியில் சிறுமி ஒருவர் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது கடந்த 9 திகதி உடையார் கட்டு தெற்கு குரவில் பகுதியில் வசிக்கும் 15 வயதுடைய சிறுமி ஒருவரை சுதந்திரபுரம் பகுதியை சேர்ந்த 23 வயது இளைஞன் ஒருவன் வீடொன்றிற்கு இரவு வேளை அழைத்து சென்று துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கியுள்ளான்.

சிறுமி துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியமையை அறிந்த உறவினர்கள் புதுக்குடியிருப்பு பொலிஸில் முறைப்பாடு வழங்கியதற்கமைவாக குறித்த சிறுமியை துஷ்பிரயோகபடுத்திய குற்றச்சாட்டில் 23 வயதுடைய இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதோடு அவர்களுக்கு உடந்தையாக இருந்த குற்றச்சாட்டில் வீட்டின் உரிமையாளரான 23 வயதுடைய இன்னுமொரு இளைஞனும் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட இருவரும் புதுக்குடியிருப்பு பொலிஸாரின் விசாரணையியின் பின்னர் தடயவியல் பொலிஸாரின் அறிக்கையோடு முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தபடவுள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!