கிளிநொச்சியில் தனியார் கல்வி நிலையங்களுக்கிடையே மோதல் – மாணவர்கள் தாக்குதலுக்கு உள்ளாகினர்.
#SriLanka
#Student
#Kilinochchi
#Attack
#education
#Class
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Lanka4
8 hours ago

கிளிநொச்சி நகரில் இயங்கி வரும் இரண்டு தனியார் கல்வி நிலையங்களுக்கிடையே நேற்று (10) மாலை கடுமையான மோதல் ஏற்பட்டுள்ளது.
தகவலின்படி, சில மாணவர்கள் இதுவரை காலமும் புவியியல் பாடங்களை ஒரு குறிப்பிட்ட தனியார் கல்வி நிலையத்தில் கற்றுவந்த நிலையில், அண்மையில் அவர்கள் அந்த நிலையிலிருந்து விலகி வேறு கல்வி நிலையத்திற்கு சென்று வந்துள்ளனர்.
இந்த மாற்றத்தால் ஏற்பட்ட முரண்பாடுகள் இன்று அடிதடியாக மாறி, சில மாணவர்களும் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர். தாக்குதலுக்குள்ளான மாணவர்களின் பெற்றோர்களும், புதிய கல்வி நிலைய நிர்வாகத்தினரும் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
இந்த சம்பவம் கிளிநொச்சி கல்வி வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



