வெந்து கெட்டது முருங்கை, வேகாமல் கெட்டது அகத்தி.....

#Health #ADDA #shelvazug #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Lanka4
6 hours ago
வெந்து கெட்டது முருங்கை, வேகாமல் கெட்டது அகத்தி.....

முருங்கைக் கீரையை அதிகம் வேக வைத்தால் அதன் சத்துக்கள் நமக்குக் கிடைக்காமல் போய்விடும். அதனை அளவாக வேக வைத்து பதமாக சாப்பிட வேண்டும். 

அப்போதுதான் அதில் உள்ள இரும்புச்சத்து முதல் அனைத்துச் சத்துக்களும் முழுமையாகக் கிடைக்கும். ஆனால், அகத்திக் கீரை இதற்கு நேர் எதிரானது. அதனை அதிகம் வேகாமல் பயன்படுத்தினால் முழுமையாக அதன் சத்து கிடைக்காது. 

அதனை நன்றாக வேகவைக்க வேண் டும். ஏனெனில் அகத்தியில் இரும்புச்சத்து உள்ளிட்டவை மிக நிறைவாக உள்ளன. அது நமது செரிமானத்துக்கு தாங்காது. ஆடு போன்ற விலங்கினங்களால்தான் அதனை பச்சையாகவும் அரைவேக்காடாகவும் சாப்பிட இயலும். மென்மையான சீரண மண்டலம் கொண்ட மனிதர்களா கிய நாம் அகத்திக் கீரையைச் சாப்பிட வேண்டுமானால் அதனை நன்றாக வேக வைக்க வேண்டும். 

இதுவே இப்பழமொழி சொல்லும் நேரடிப் பொருள். ஆனால், இது போலத்தான் ஒரு செயல் அல்லது ஒரு பொருள் ஒருவ ருக்கு குறைவாகத் தேவைப்படும். இன்னொருவருக்கு அதிகமாகத் தேவைப்படும். அதிகம் தேவைப்படுபவர் குறைவாக கிடைத்தாலும் நஷ்டமடைவார். 

குறைவா கத் தேவைப்படுபவர் அதிகம் கிடைத்தாலும் கையாளத் தெரியாமல் சிரமப்படுவார். இதனையே இப்பழமொழி உள்ளர்த்தமாகக் குறிக்கிறது...

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

images/content-image/1754511373.jpg




உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!