பாகிஸ்தானில் அடுத்தடுத்து இடம்பெற்ற தாக்குதல்கள் - 25 பேர் பலி!
#SriLanka
#Attack
#Pakistan
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Dhushanthini K
1 week ago

பாகிஸ்தானில் நடந்த மூன்று தாக்குதல்களில் குறைந்தது 25 பேர் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதில் தென்மேற்கு மாகாணமான பலுசிஸ்தானில் ஒரு அரசியல் பேரணியை குறிவைத்து தற்கொலை குண்டுதாரி நடத்திய தாக்குதலில் 14 பேர் இறந்தனர்.
இதன்போது பலுசிஸ்தான் தேசியக் கட்சியின் (BNP) நூற்றுக்கணக்கான உறுப்பினர்கள் கூடியிருந்தனர் என்று இரண்டு மாகாண அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
காயமடைந்தவர்களில் குறைந்தது ஏழு பேர் ஆபத்தான நிலையில் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஈரான் எல்லைக்கு அருகிலுள்ள பலுசிஸ்தானில் நடந்த மற்றொரு தாக்குதலில் செவ்வாயன்று ஐந்து பேர் கொல்லப்பட்டனர், அதே நேரத்தில் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள அவர்களின் தளத்தில் நடந்த தற்கொலைத் தாக்குதலுக்குப் பிறகு ஆறு வீரர்கள் கொல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



