மனித உரிமைகள் தொடர்பான முன்னேற்றங்கள் குறித்து இராஜதந்திரிகளுக்கு விளக்கம்!

இலங்கையில் மனித உரிமைகள் தொடர்பான அண்மைக்கால முன்னேற்றங்கள் குறித்து கொழும்பைத் தளமாகக் கொண்ட இராஜதந்திரிகளுக்கு வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் விளக்கமளித்துள்ளார்.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் அமர்வு ஆரம்பமாகவுள்ள நிலையில், நேற்று அமைச்சில் இது தொடர்பான நிகழ்வு நடத்தப்பட்டுள்ளது.
இந்த விளக்கக் கூட்டத்தின் போது, மனித உரிமைகள் தொடர்பில் இலங்கை அடைந்துள்ள முன்னேற்றத்தை சர்வதேச சமூகம் அங்கீகரித்து ஆக்கபூர்வமான உரையாடலில் ஈடுபட வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டதாக இலங்கை வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சகம், சட்டமா அதிபர் துறை, காணாமல் போனோர் அலுவலகம், இழப்பீடுகளுக்கான அலுவலகம், தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலகம் ஆகியவற்றின் அதிகாரிகளும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



