கச்சத்தீவுக்கு ஆய்வுப் பயணம் மேற்கொண்ட ஜனாதிபதி!
#SriLanka
#AnuraKumaraDissanayake
#Visit
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Dhushanthini K
4 hours ago

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க கச்சத்தீவுக்கு ஆய்வுப் பயணம் மேற்கொண்டதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு (PMD) தெரிவித்துள்ளது.
மீன்வளம், நீர்வாழ் உயிரினங்கள் மற்றும் சமுத்திர வள அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர், பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால மற்றும் வடக்கு கடற்படைப் பகுதியின் தளபதி ரியர் அட்மிரல் புத்திக லியனகமகே ஆகியோரும் இந்த விஜயத்தில் ஜனாதிபதியுடன் இணைந்தனர்.
இன்று முன்னதாக, யாழ்ப்பாண நூலகத்தை மின் நூலகமாக மேம்படுத்தும் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டதுடன், யாழ்ப்பாண சர்வதேச கிரிக்கெட் மைதானத்தின் கட்டுமானப் பணிகளும் ஜனாதிபதியின் ஆதரவின் கீழ் தொடங்கப்பட்டன.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



