இந்தோனேசியாவில் வன்முறையாக மாறிய அரசாங்க எதிர்ப்பு போராட்டம் - மூவர் மரணம்

#Death #Arrest #Protest #government #Indonesia
Prasu
2 months ago
இந்தோனேசியாவில் வன்முறையாக மாறிய அரசாங்க எதிர்ப்பு போராட்டம் - மூவர் மரணம்

இந்தோனீசியாவில் அரசாங்கத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டம் மோசமடைந்துள்ளது. இந்நிலையில், இந்தோனீசியாவின் கிழக்குப் பகுதியில் உள்ள மக்காசார் நகரின் நகர மன்றக் கட்டடத்துக்கு ஆர்ப்பாட்டக்காரர்கள் தீவைத்தனர்.

அதில் குறைந்தது மூவர் உயிரிழந்தனர். இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும் ஒருவர் மருத்துவமனையில் உயிரிழந்ததாகவும் நகர மன்றச் செயலாளர் ரஹ்மத் மப்பதோபா தெரிவித்தார்.

தீப்பற்றி எரிந்த கட்டடத்தில் அந்த மூவரும் சிக்கியதாக அவர் கூறினார்.ஆர்ப்பாட்டக்காரர்கள் நகர மன்றக் கட்டடத்துக்குள் அத்துமீறி நுழைந்து தீமூட்டியதாக அவர் குற்றம் சுமத்தினார்.

உயிரிழந்தோரில் பொதுமக்கள் நல்வாழ்வுப் பிரிவின் தலைவரும் பொது ஒழுங்குப் பிரிவின் உறுப்பினர் ஒருவரும் அடங்குவர் என்று தெரிவிக்கப்பட்டது. கொழுந்துவிட்டு எரிந்த கட்டடத்திலிருந்து தப்பிக்க நான்காவது மாடியிலிருந்து குதித்த ஒருவர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

images/content-image/1754511373.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!