கிழக்கில் காணாமல்போனோருக்கு நீதிகோரி மாபெரும் ஆர்ப்பாட்டம் !

#SriLanka #Protest #Lanka4
Mayoorikka
8 hours ago
கிழக்கில் காணாமல்போனோருக்கு நீதிகோரி மாபெரும் ஆர்ப்பாட்டம் !

கிழக்கு மாகாணத்தில் அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்களின் மக்கள் ஒன்றிணைந்து, சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்தனர். 

 குறித்த ஆர்ப்பாட்டம் இன்று சனிக்கிழமை 30) மட்டக்களப்பு கல்லடி பாலத்திலிருந்து ஆரம்பமாகி காந்திபூங்கா வரை இடம்பெற்று அங்கு ஐக்கிய நாடுகளுக்கு கையளிப்பதற்கான மகஜர் வாசிக்கப்பட்டு நிறைவடைந்தது. 

 ஆர்ப்பாட்டத்தில் ஊர்திப் பவனிகள் இடம்பெற்றதுடன் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் புகைப்படங்களை அவர்களது உறவினர்கள் ஏந்தியிருந்தனர். 

 செம்மணி மனிதப்புதைகுழிகள் தழின அழிப்புக்கு சான்று என்றும் ஸ்ரீலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் பாரப்படுத்துமாறும் வடக்கு, கிழக்கில் இருந்து இராணுவத்தை வெளியேற்றுமாறும் காணாமல் ஆக்கப்பட்டோருகு்கு நீதி கேட்டும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

 ஆர்ப்பாட்டத்தில் அரசியல்வாதிகள், பாராளுமன்ற உறுப்பினர்களான சிறிநாத், சிறிநேசன், கோடீஸ்வரன் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான கோவிந்தன கருணாகரன், அரியநேத்திரன், பிரதேச சபை தவிசாளர்கள் உறுப்பினர்கள், மாநகர சபை முதல்வர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

images/content-image/1754511373.jpg


உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!