பரீட்சைகளை உரிய கால அட்டவணையில் நடத்துவற்கு ஏற்பாடுகள்!

2026 ஆம் ஆண்டு முதல் கல்வி பொதுத்தராதர சாதாரண தர மற்றும் உயர்தரப் பரீட்சைகளை உரிய கால அட்டவணையில் நடத்துவற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ஜனாதிபதி தலைமையில் நேற்று (29) நடைபெற்ற கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட பூர்வாங்கக் கலந்துரையாடலில் போது இது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
அனைத்து மாணவர்களுக்கும் தரமான கல்வியை உறுதிப்படுத்தும் வகையில் எமது நாட்டின் பாடசாலை கட்டமைப்பை முறைமைப்படுத்துதல் மற்றும் பாடத்திட்ட சீர்திருத்தம் ஆகியவற்றில் கவனம் செலுத்துமாறும், ஒவ்வொரு மாணவருக்கும் தரமான கல்வியை உறுதி செய்யும் வகையில், அரசாங்கத்தின் கல்வி சீர்திருத்தங்களின் விரும்பிய இலக்குகளை அடைய தேவையான முதலீடுகளைச் செய்யுமாறும் கல்வி அமைச்சின் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அறிவுறுத்தினார்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



