இலங்கையில் உச்சம் கொடுக்கும் சூரியன்! வெப்பநிலை தொடர்பில் எச்சரிக்கை

#SriLanka #weather #Lanka4 #hot #SHELVAFLY
Mayoorikka
4 hours ago
இலங்கையில் உச்சம் கொடுக்கும் சூரியன்! வெப்பநிலை தொடர்பில் எச்சரிக்கை

நாட்டின் சில பகுதிகளில் இன்றும் சூரியன் உச்சம் கொடுக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

 மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும். ஊவா மாகாணத்திலும், அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களிலும் பிற்பகல் 2:00 மணிக்குப் பின் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். 

 மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகள், வடக்கு, வடமத்திய, வடமேல் மாகாணங்கள், திருகோணமலை, ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் அவ்வப்போது மணிக்கு 40-50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.

 மின்னல் தாக்கங்கள் மற்றும் பலத்த காற்றினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம், பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.

 அதே நேரத்தில், சூரியனின் தெற்கு நோக்கிய இயக்கம் காரணமாக, இவ்வருடம் ஓகஸ்ட் 28 முதல் செப்டம்பர் 7 வரை இலங்கையின் அகலாங்குகளுக்கு நேராக உச்சம் கொடுக்கவுள்ளது. அதன்படி, இன்று (30) நண்பகல் 12:11 மணியளவில் வான்கலை, ஓமந்தை, வேதகிலங்குளம், கெலபோகஸ்வெவ, மற்றும் திரிய ஆகிய பிரதேசங்களுக்கு மேலாக சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

images/content-image/1754511373.jpg


உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!