மொராக்கோவில் 16.5 கோடி ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த டைனோசர் படிமம் கண்டுபிடிப்பு
#Research
#Dinosaur
#skeleton
#Morocco
Prasu
2 hours ago

மொராக்கோவில்16.5 கோடி ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த டைனோசரின் அதாரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பவுல்மேன் நகரத்திற்கு அருகிலுள்ள அட்லஸ் மலைப்பகுதியில், ஸ்பைகோமெல்லஸ் எனப்படும் அரிய வகை டைனோசரின் புதைபடிம எச்சங்களை தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
சுமார் 16.5 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த இந்த டைனோசர், 13 அடி நீளம் மற்றும் சுமார் 2 டன் எடையுடன் இருந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது.
அதன் உடலெங்கிலும் முற்கள் இருந்ததோடு, தலைப்பகுதியில் மட்டும் 3 அடி நீளமான கொம்புகள் இருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த வகை டைனோசர்கள் மிகவும் மெதுவாக நகரும் தாவர உண்ணிகள் எனவும், விலங்குத் துறையில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட அதிசயமான ஒரு உயிரினமாகவும் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



