கேப்பாபிலவு காணிகளை கோரும் விமானப்படையினர்!

#SriLanka #Mullaitivu #Lanka4 #SHELVAFLY
Mayoorikka
8 hours ago
கேப்பாபிலவு காணிகளை கோரும் விமானப்படையினர்!

முல்லைத்தீவு - கேப்பாப்பிலவில் அமைந்துள்ள 0.5ஹெக்டயர் மக்களின் விவசாயக்காணிகளை விமானப்படையினருக்கு ஒருபோதும் வழங்க அனுமதிக்க முடியாது என்று நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார். 

 முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

 படையினரால் ஏற்கனவே ஆக்கிரமித்திருந்த குறித்த காணி விடுவிப்புச்செய்யப்பட்டநிலையில், அக்காணியில் மக்கள் விவசாயநடவடிக்கையில் ஈடுபட்டுவருகின்றனர். 

அந்தக்காணியினை விமானப்படை தமக்குத்தருமாறு மீண்டும் கோருவது பொருத்தமற்ற செயற்பாடாகும். அத்தோடு இன்னும் 190 ஏக்கர் அளவில் மக்களுக்குரிய காணிகள் கேப்பாப்பிலவில் விடுவிக்கப்படவேண்டியுள்ளது. 

இந்நிலையில் தமது காணிகளை விடுவிக்கவேண்டுமென கேப்பாப்புலவு மக்கள் தொடர்ந்து போராடியும், கோரிக்கைகளை முன்வைத்தும் வருகின்றனர். இவ்வாறிருக்க விமானப்படையினர் விடுவிக்கப்பட்ட மக்களின் காணியினை மீண்டும் கோருவது வேடிக்கையாகவுள்ளது. 

 யுத்தம் மௌனிக்கப்பட்டு ஒன்றரைத் தசாப்தகாலத்திற்கு மேலாகியுள்ள நிலையில் மக்களின் காணிகளை அபகரித்து இங்கிருந்துகொண்டு விமானப்படையினர் யாருடன் யுத்தம் செய்யப்போகின்றனர். எனவே கேப்பாப்புலவு மக்களின் விவசாயக் காணிகளை விமானப்படைக்கு வழங்குவதற்கு ஒருபோதும் அனுமதிக்கமுடியாது என்று கடுமையான எதிர்ப்பை வெளியிட்டு தெரிவித்துள்ளார்.


லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

images/content-image/1754511373.jpg


உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!