அடுத்த மாதம் இங்கிலாந்து செல்லும் இளவரசர் ஹாரி
#Queen_Elizabeth
#Prince Harry
#England
#memorial
Prasu
18 hours ago

இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மறைவின் மூன்றாம் ஆண்டு நிறைவை ஒட்டி, செப்டம்பர் 8 ஆம் தேதி நடைபெறும் தொண்டு விருது வழங்கும் விழாவில் கலந்து கொள்ள இளவரசர் ஹாரி இங்கிலாந்து செல்ல உள்ளார்.
“இளவரசர் ஹாரி செப்டம்பர் 8 ஆம் தேதி லண்டனில் வெல்சைல்ட் விருது வழங்கும் விழாவில் கலந்து கொள்ளவார்” என்று தீவிர நோய்களால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் சாதனைகளைக் கொண்டாடும் தொண்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.
“வெல்சைல்ட் விருதுகளில் கலந்துகொள்வதற்கும், அவர்களின் வலிமை மற்றும் மனப்பான்மையால் நம் அனைவரையும் ஊக்குவிக்கும் நம்பமுடியாத குழந்தைகள், குடும்பங்கள் மற்றும் நிபுணர்களைச் சந்திப்பதற்கும் நான் எப்போதும் பாக்கியம் பெறுகிறேன்” என்று 2007 முதல் தொண்டு நிறுவனத்தின் புரவலராக இருக்கும் ஹாரி ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



