லொறியின் சாரதி தூங்கியதால் ஏற்பட்ட விபரீதம்: பாடசாலை மாணவி உட்பட இருவர் உயிரிழப்பு

#SriLanka #Accident #Lanka4
Mayoorikka
4 hours ago
லொறியின் சாரதி தூங்கியதால் ஏற்பட்ட விபரீதம்: பாடசாலை மாணவி உட்பட இருவர் உயிரிழப்பு

ஹொரவப்பொத்தானை - கஹடகஸ்திகிலிய பிரதான வீதியில் எலயாபத்து பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பாடசாலை மாணவி உட்பட இருவர் உயிரிழந்துள்ளனர்.

 நேற்று பிற்பகல் இந்த விபத்து நிகழ்ந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. வவுனியாவிலிருந்து அனுராதபுரத்திற்கு கண்ணாடி ஏற்றிச் சென்ற லொறி, சாரதி தூங்கியதால் வீதியை விட்டு விலகி, அருகிலுள்ள பாலத்தின் தடுப்பு வேலியில் மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில், பாடசாலை முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த 10 வயது பாடசாலை மாணவி ஒருவரும், 27 வயது இளைஞரும் உயிரிழந்துள்ளனர்.

 உயிரிழந்த இளைஞர் லொறியின் உதவியாளராக இருந்தவர் எனத் தெரிவிக்கப்படுகிறது. லொறியில் பயணித்த சாரதி மற்றும் மற்றொரு நபர் பலத்த காயங்களுடன் ஹொரவப்பொத்தானை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாக வைத்தியசாலைப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

 ஹொரவப்பொத்தானை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

images/content-image/1754511373.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!