சீனாவிற்கு விஜயம் செய்யும் வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன்!
#SriLanka
#NorthKorea
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Dhushanthini K
2 hours ago

வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன் சீனாவுக்கு விஜயம் செய்ய முடிவு செய்துள்ளார். செப்டம்பர் 3 ஆம் திகதி சீனாவில் நடைபெறும் வெற்றி தின அணிவகுப்பில் வட கொரிய தலைவர் கலந்து கொள்ள உள்ளார் என்று வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த விஜயம் வட கொரிய தலைவரின் முதல் சர்வதேச அளவிலான சந்திப்பு என்று சீனா கூறுகிறது.
ஜப்பானுக்கு எதிரான எதிர்ப்புப் போரின் 80வது ஆண்டு நிறைவை நினைவுகூரும் வெற்றி தின அணிவகுப்பில் 26 நாட்டுத் தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
மேலும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினும் கலந்து கொள்ள உள்ளார் என்று வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



