இலங்கை – குவைத் உறவுகளை மேலும் வலுப்படுத்த விசேட கலந்துரையாடல்!
இலங்கை மற்றும் குவைத் இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது தொடர்பான விசேட கலந்துரையாடல் இன்று (17) துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சில் நடைபெற்றது.
இலங்கைக்கான குவைத் தூதுவர் சாலெஹ் முபாரக் அல்-சராவி மற்றும் துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அனுர கருணாதிலக்க ஆகியோருக்கு இடையில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.
இதன்போது துறைமுகம், விமானப் போக்குவரத்து, வர்த்தகம், எரிசக்தி, கைத்தொழில் மற்றும் முதலீடு உள்ளிட்ட துறைகளில் இரு நாடுகளுக்கிடையிலான ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது குறித்து கலந்துரையாடப்பட்டது.
குறிப்பாக, இலங்கையில் காணப்படும் முதலீட்டு வாய்ப்புகளை குவைத் முதலீட்டாளர்களுக்கு அறிமுகப்படுத்துவது, துறைமுகத் துறையில் அறிவு மற்றும் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்வது மற்றும் இரு நாடுகளின் வர்த்தக சபைகளுக்கு இடையில் பிரதிநிதிக் குழுக்களை பரிமாறிக்கொள்வது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.
மேலும், பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்தும் வகையில் இரு நாடுகளுக்கும் இடையில் அரசியல் ஆலோசனை ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்துவதன் முக்கியத்துவமும் வலியுறுத்தப்பட்டது.
இறுதியாக, இலங்கை–குவைத் நட்புறவை மேலும் வலுப்படுத்தி, பொருளாதாரம், வர்த்தகம், துறைமுகம் மற்றும் முதலீட்டுத் துறைகளில் நடைமுறை ஒத்துழைப்பை விரிவுபடுத்த இரு தரப்பினரும் இணக்கம் தெரிவித்தனர்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே