சுவிற்சர்லாந்தில் நான்கு வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து
#Police
#Switzerland
#Accident
#Road
Prasu
2 hours ago

பாசல் நோக்கிச் செல்லும் A2 மோட்டார் பாதையில், ஸ்வீசர்ஹால் சுரங்கப்பாதைக்கு அப்பால், நான்கு வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்ட விபத்தில் 7 பேர் காயம் அடைந்தனர்.
29 வயதான ஓட்டுநர் ஒருவர் முன்னால் சென்ற வாகனத்தின் பின்புறத்தில் மோதியதை அடுத்து, நான்கு வாகனங்கள் ஒன்றின் மீது ஒன்று மோதி விபத்துக்குள்ளானதாக பாசல்-லேண்ட்ஷாஃப்ட் கன்டோனல் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்தில் ஏழு பேர் காயமடைந்தனர். முதலுதவிக்குப் பிறகு அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



