எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் ஒன்றுக்கூடிய பலம் வாய்ந்த அரசியல் தலைவர்கள்!
#SriLanka
#Opposition
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
3 months ago
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று (25) மதியம் எதிர்க்கட்சியின் பலம் வாய்ந்த அரசியல்வாதிகள் பலர் கூடியுள்ளனர்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தடுப்பு உத்தரவு மற்றும் எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் குறித்து விவாதிப்பதே இந்தக் கலந்துரையாடலின் முக்கிய நோக்கமாகக் கூறப்படுகிறது.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நாடாளுமன்ற உறுப்பினர்களான ரவி கருணாநாயக்க, ரஞ்சித் மத்துமபண்டார, கபீர் ஹாஷிம் மற்றும் பழனி திகாம்பரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான ருவான் விஜேவர்தன, காவிந்த ஜெயவர்தன, நிமல் சிறிபால டி சில்வா, ஜி.எல். பீரிஸ் மற்றும் சாகல ரத்நாயக்க ஆகியோர் இந்தக் கூட்டத்தில் இணைந்துள்ளனர்.
இதற்கிடையில், சமகி ஜன பலவேகயவை பிரதிநிதித்துவப்படுத்தும் மற்றொரு நாடாளுமன்ற உறுப்பினர் குழுவும் இணைந்துள்ளது.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை
